இம்முறை தேர்தலில் படித்தவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துள்ளனர் - ஞானசார தேரர்
அரசியல்வாதிகள் மத்தியில் புதிய சிந்தனைகள் ஏற்பட வேண்டுமென்ற செய்தியை நடந்து முடிந்த மாகாண சபைத் தேர்தல்கள் ஊடாக மக்கள் வழங்கியுள்ளனர் என பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்தார்.
பெரும்பாலான அரசியல்வாதிகள் மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதில்லை. தேர்தல் முடிந்து வெற்றி பெற்றவுடன் மக்களால் அரசியல்வாதிகளை சந்திக்க முடியாது. தாம் கூட்டங்களில் இருப்பதாகவே கூறுவார்கள். அத்தோடு மக்களின் தேவைகள் தொடர்பாக தேடிப் பார்ப்பதில்லை.
இம்முறை தேர்தலில் படித்தவர்கள் வாக்களிப்பதை தவிர்த்துக்கொண்டுள்ளனர். இத்தேர்தல் முடிவுகள் மூலம் மக்கள் அரசியல்வாதிகள் புதிதாக சிந்திக்க வேண்டுமென்ற செய்தியை வழங்கியுள்ளனர் என்றும் தேரர் தெரிவித்தார்.
நடந்து முடிந்த தென் மற்றும் மேல் மாகாண சபைத் தேர்தல்கள் தொடர்பில் கருத்து தெரிவித்த போதே கலகொட அத்தே ஞானசார தேரர் இதனைத் தெரிவித்தார். Vi
வாக்களித்தவர்கள் 'படிக்காத முட்டாள்கள்....அப்படியா......???? இதற்கு நடந்து முடிந்த இரண்டு மாகாணத்திலும் வாக்களித்தவர்கள் தான் பதில் சொல்லவேண்டும்..... ?
ReplyDeleteஅப்போ கண்டிப்பா நீங்க வோட் போட்டு இருகிறிங்க, இல்லையா?
ReplyDeleteஅரிய கண்டுபிடிப்பு
ReplyDeleteஅடடா.. எண்ட செல்லம் கொன்சம் அறிவுப்பூர்வமா பேச ஆரம்பிச்சிட்டானே. புத்தி கொன்சம் கம்மியானாலும் தேரர் கோபக்காரர் என்று சொன்னாங்களே.. வர வர தேரரும் யோசிக்க ஆரம்பிச்சுட்டார்.
ReplyDelete