கல்முனை பஸ் தரிப்பு நிலையம் பசுமையாகுமா..?
(கே.சி.எம்.அஸ்ஹர்)
கல்முனை நகரத்தில் அமைந்துள்ள பஸ் நிலையத்திற்கு நாளாந்தம் ஆயிரக்கணக்கான பயணிகள் வந்து செல்கின்றனர்.இங்கிருந்து பல நகரங்களுக்;குமான பஸ் சேவைகளும் நடைபெறுகின்றன. அரச சார்பற்ற நிறுவனம் ஒன்று இங்கு பஸ் தரிப்பிடம் ஒன்றை அமைத்துக் கொடுத்துள்ளது. இச் சூழலில் பசுமையான எவ்வித மரமும் இல்லாமல் இருப்பதனால் அனல் காற்று வீசுவதும் பயணிகள் அவதிப்படுவதும் வழக்கமாயிற்று.
கல்முனை மேயர்களாக இருந்த மசூர் மௌலானாவும் ,சிராஸ் மீராசாகிபும் எவ்வித பசுமையாக்கும் முயற்சிகளையும் இங்கு செய்யவில்லை. சூழல் குளுமையாகவும் ,பசுமையாகவும் இருக்க வேண்டும். என்றால் அங்கு துரிதமாகவும் ,பசுமையாகவும் வளரக்கூடிய மரக்கன்றுகளை (காயா,மககோணி) நாட்ட வேண்டும். இப்பணியை புதிய மேயர் நிசாம் காரியப்பராவது செய்து முடிப்பாரா? என மக்கள் எதிர்பார்க்கின்றனர். 'நாளை மறுமை ஏற்படப் போகின்றது என்ற ஒரு நிலையிருந்தாலும் உன்கையில் மரக்கிளை கிடைக்குமாயின் அதனை உடனே நாட்டிவிடு'(ஹதீஸ்) 
Post a Comment