புத்தளம் மண்ணில் யாழ்ப்பாண முஸ்லிம்களின் வரலாற்று நுால் (படங்கள் இணைப்பு)
இலங்கையின் வரலாற்றில் யாழ்ப்பாணம் என்பது காலச்சுவடுகளால் அழிக்க முடியாததொன்றாகும்.இலங்கையின் ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பீட்டு அளவில் நோக்குகையில் யாழ்ப்பாணம் முஸ்லிம்களின் சிறப்பபான பணி ஏனையவர்களுக்கு எடுத்துக்காட்டுவனவாக அமைந்திருப்பது மற்றுமொரு சிறப்பம்சமாகும்.இப்படிப்பட்ட மண்ணின் வாசனைகளை இக்காலத்து மக்களும் அறிந்து கொள்ள எடுக்கப்பட்ட ஒரு முயற்சியின் வெளிப்பாடு தான் தற்போது வெளிவந்துள்ள முஹம்மத் சரீப் முஹம்மத் ஜான்ஸின் தொகுத்துள்ள மணிபல்லவத்தார் சுவடுகள் என்னும் வரலாற்று நுாலாகும்.
ஒரு சமூகம் தமது இறந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் நின்று கொண்டு எதிர்காலம் பற்றி கனவு காண்பது எனபது வெறும் கானல் நீராகத்தான இருக்கும் என்பதை பல அறிஞர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துரைத்துள்ளனர்.இறந்த கால வரலாற்றினை மீட்டிப்பாரப்பதன் மூலம் எம்மில் எத்தனையோ புதிய சிந்தனைகளும்,ஆற்றல்களும் ஏற்படும்,அதனை வைத்து எதிர்கால சமூகத்திற்கு சிறந்ததொரு அடித்தளத்தை இட முடியும்.ஒரு சமூகத்தின் வரலாறு பேசப்படுமெனில் அப்போது தான் அதன் மகத்துவமும்,மகிமையும் ஒளி வீசும்.இந்த வகையில் இந்த ஆக்கம் இலங்கை முஸ்லிம்களுக்கு ஒரு முன்மாதிரிமிக்கதாக இருக்கும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.ஒவ்வொரு முஸ்லிம் பாடசாலைகளின் நுாலகத்தில் இந்த தொகுப்பு இருக்குமெனில் அது கற்றலுடன் தொடர்புபட்ட மாணாக்கருக்கும்,ஆசிரியர்களும் ஒரு பொக்கிஷமாகவே விளங்கும்.264 பக்கங்களில் வடமாகாணத்தின் தலைநகரான யாழ் மண்ணினைப்பற்றியும்,அங்கிருந்த முஸ்லிம்களின் சகல விடயங்களையும் குறுகிய மூன்றரை வரு காலத்துக்குள் தேடிப் பெற்று அவற்றை நுாலுருவில் கொண்டுவந்திருக்கும் நுாலின் ஆக்கிய நுாலாசிரியர் எம்.எஸ்.எம்.ஜான்சின் பாராட்டுக்குரியவர்.
எத்தனையோ ஆவணப்படுத்தல்களுக்கான முயற்சிகள் பல்துறை சார்ந்தவர்களால் எடுக்கப்பட்ட போதும் ,இத்துணை தகவல்களை நேர்த்தியாக புகைப்படங்களுடன் இந்த நுால் சுமந்துவருகின்றமை எமது வகிப்பகத்தின் பெறுமானத்தை காட்டுகின்றது.முஸ்லிம்களின் வரலாற்றுப் பதிவுகள் ஒட்டுமொத்த நுாலுருவில் வருவதை வட மாவட்ட ரீதியில் அதன் புள்ளி விபரங்களை சரியாக வழங்குவதற்கு நுாலாசிரியர் எம்.எஸ்.எம்.ஜான்சின் முன்மாதிரிமிக்க முயற்சியினை வழங்கியிருக்கின்றார்.இலங்கையில் புகழ்பூத்தவர்கள் என அழைக்கப்படும் பலர் யாழ் மண்ணினை சேர்ந்தவர்கள் அவர்களின் வாழ்க்கையும்,வரலாறும் பாதுகாக்கப்படும் ஒரு ஆவணப்படுத்தலாக இந்த நுால் காணப்படுகின்றது.
மூத்த முன்மாதிரி மிக்க சட்ட துறையறிஞர் எம்.சீ.அப்துல் காதர்(1879-1946),சிறந்நத கல்வியலாளர்,இலங்கையின் முதல். சிவில் அதிகாரி என்ற பெயரை சூடிக்கொண்ட கலாநிதி ஏ.எம்.ஏ.அஸீஸ்(1911-1972),நீதியரசர் எம்.எம்.எம்.அப்துல் காதர்,அரசாங்க அதிபர் எம்.எம்.மக்பூல்,யாழ் மாநகர சபையின் முதல் முஸ்லிம் மேயர் எம்.எம்.சுல்தான் உள்ளிட்ட இன்னும் எத்தயோ அறிஞர்களும்,துறை சார்ந்தவர்களும் யாழ் மண்ணில் பிறந்து இந்த நாட்டுக்கு நற்பெயரை பெற்றுக் கொடுத்துள்ளதை இந்த நுாலில் காணமுடிகின்றது.
அத்தோடு 1983 ஆண்டு காணப்பட்ட அசாதாரண சூழ் நிலையினையடுத்து யாழ் முஸ்லிம்கள் 5 தடவை வெளியேற்றத்தை சந்தித்துள்ளனர்.அந்த வரிசையில் 1990 ஆம் முஸ்லிம்களின் வெளியேற்றம் இனச்சுத்திகரிப்பாக மாறியதை நினைவுபடுத்துவது இந்த நுாலின் மற்றுமொரு பார்வையாகும்.இடம் பெயர்வு ஏற்படுத்திய அழிவுகள்,இழப்புக்கள் தொடர்பில் ஆவணப்படுத்தி இதனை பாதுகாக்க வேண்டும் என்ற வேட்கை தாங்கள் வெளியேற்றப்பட்டு அநுராதபுரம் முதல் மாத்தறை வரை உள்ள கிராமங்களில் வாழ்ந்த வரலாறு,இவற்றுக்கு எல்லாம் மேலாக வெளியேறி வந்த போது புத்தளம் மாவட்ட மக்கள் வழங்கிய உபசரிப்பு ஒரு போதும் மறக்கமுடியாத மற்றுமொரு பதிவு,அதற்கு கைமாறாக எதனை செய்தாலும் அது போததது என்ற உணர்வு பூர்வமான கருத்துக்கள் இந்த நுாலின் வெளியீட்டுக்கு புத்தளம் இபுனு பதுாதா மண்டபத்தை தேர்ந்தெடுத்தமைக்கு மற்றுமொரு காரணமாகும் என்பதை நுாலாசிரியர் பகிர்ந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
சனிக்கிழமை (2014.03.29) புத்தளத்தில் இடம் பெற்ற இந்த வெளியீட்டு விழாவில் புத்தளம் நகர முதல்வர் கே.ஏ.பாயிஸ்,வடமேல் மாகாண சபை உறுப்பினர் எஸ்.எச்.எம்.நியாஸ்,முன்னாள் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ஜ.எம்.இல்யாஸ்,முன்னால் வடமேல் மாகாண அமைச்சர் எம்.எச்எம்.நவவி,யாழ் மாநகர சபை உறுப்பினர் மௌலவி சுபியான்,முன்னால் உஸ்மானிய கல்லுாரி அதிபர்,கல்வி அமைச்சின் முன்னால் செயலாளர் நாயகம் மஹ்ரூப் மரைக்கார்,பிரதி கல்விப் பணிப்பாளர் எம்.ஏ.எம்.எம்.ஜவாத் மரைக்கார் உட்பட பலர் கலந்து கொண்டு நிகழ்வினை சிறப்பித்தமையினையும் இங்கு குறிப்பிடுவது காலத்தின் பொருத்தமாகும்.
Post a Comment