Header Ads



காலத்தின் தேவையறிந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தல் வேண்டும் - அப்துல் சத்தார்

(இக்பால் அலி)

அபிவிருத்திப் பாதையில் மிகுந்த சுபிட்சமாகமுடைய நாடாகவும்  அன்றாட வாழ்க்கைக்கு மிகுந்த  நிம்மதியான நாடாகவும் இன்றைய இலங்கை விளங்குகின்றன. 30 வருட காலமாக நிலவிய கொடிய கொடூர யுத்தத்தை எமது நாட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முடிவுக் கொண்டு வந்ததையிட்டு எமது நாட்டு மக்கள் இந்த நிம்மதிப் பெரு மூச்சை விட்டு வருகின்றனர் என்று குருநாகல் மாநகர சபை உறுப்பினரும் குருநாகல் மாவட்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைப்பாளருமான அப்துல் சத்தார் தெரிவித்தார். அவர் மேலும் கருத்து வெளியிடுகையில்

முப்பது வருட யுத்த காலத்தில் எமது முஸ்லிம் மக்களும் சொல்லொண்ணாத் துன்பங்களை அனுபவித்த வந்தனர். வடபுலத்திலிருந்து முஸ்லிம்கள் விரட்டிடியக்கப்பட்டனர். கிழக்கு மாகாண முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டனர். குறிப்பாக முஸ்லிம்களுடைய வியாபாரத்துறை பாதிக்கப்பட்டது. இதில் குறிப்பாக அக்குரணை வாழ் முஸ்லிம் மக்கள் அதிக வியாபாரத்துறையில் ஈடுபாடுடையவர்கள். இவர்களும் நன்கு பாதிக்கப்பட்டு இருந்தார்கள். இலங்கை நிம்மதியாக வாழ முடியாத ஒரு பொருத்தமற்ற நாடாகவே விளங்கின.

எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இவற்றையெல்லாம் இல்லாமற் செய்து மனித வாழ்வுக்கு மிகப் பாரிய அபிவிருத்திப் பணிகைகள் மேற்கொள்ளப்பட்டு உலகமே வியக்குமளவுக்கு இன்று வளமான தேசமாக இலங்கை உருவாக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பாதை யாவும் காபட் வீதிகளாக அபிவிருத்தி. நாட்டிலுள்ள அனைத்து உள்ளூர் விதிகள் அனைத்து கிராமங்களிலும் உட்கட்டமைப்பு வசதி, வடக்கின் வசந்தம், கிழக்கின் உதயம் வேலைத் திட்டத்தின் கீழ் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் புதிய மீள் குடியேற்ற வசதிகளுடன் பாரிய அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பின்னணியில் எமது ஜனாதிபதி அவர்களுடைய புதவல்வரும் இளம் பாராமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷவின் பங்களிப்பும் முக்கிய  பங்கை வகிக்கின்றன. நில்பலகாய என்ற அமைப்பின் ஊடாக நாட்டின் ஒவ்வொரு  மூலை முடுக்களுக்கும் சென்று இந்நாட்டு மக்களுடைய கஷ;ட நஷ;டங்களைக் கேட்டறிந்து அவர்களுடைய குறை நிறைகளைத் தீர்த்து வருகின்றார். இந்நாட்டில் தோன்றிய ஜனாதிபதியுடைய எந்தப் புதல்வகளும் செய்யாத பணியை செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக விடயமாகும்.

நாட்டில் வாழும் அனைத்து இன மக்களுக்கு மத்தியில்  எந்தவிதமான பாகுபாடுகளுமின்றி தமது சேவையை இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினர் முன்னெடுத்துச் செல்கின்றார். இவர் கடந்த மத்திய. வடமேல் மாகாண சபைத் தேர்தலில் கட்சியின் வெற்றிக்காக அரும்பாடுபட்டு உழைத்தார். தற்போது மேல், தென் மாகாண சபைத்  தேர்தல் வெற்றிக்காக அதி தீவிரமாக உழைத்து வருகின்றார்.  இவரது உழைப்பானது உறுதிப்படுத்தப்பட்ட வெற்றியை கொண்டதாகவே உள்ளன.. எனவே மேல், தென் மாகாணங்களில் வாழும் அனைத்து மக்களும்  நிச்சயிக்கப்பட்ட வெற்றிக்காக பக்கபலமாக இருக்கின்றனர். 

எனவே இந்த நாட்டு மக்களிடையே பரஸ்பரம் ,நல்லெண்ணம், ஒற்றுமையை ஏற்படுத்த முனையும் இந்த இளம் பாராளுமன்ற உறுப்பினரின் சேவையை மேலும்  பரந்த மட்டத்தில் பெற்றுக் கொள்வதற்காக எமது  சமூகத்தைச் சார்ந்த மேல். தென் மாகாணங்களில் வாழுகின்ற முஸ்லிம் மக்கள் காலத்தின் தேவையறிந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு வாக்களித்தல் வேண்டும்.

அதேவேளை எமது தாய் நாட்டின் எழுச்சியைத் தாங்கிக் கொள்ள முடியாத வெளிநாட்டு சக்திகளினால் எமது நாட்டுக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைப் பேரவையில் முன்வைக்கப்பட்ட மனுவின் தீர்மானத்துப் பதிலடியாக இந்நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம் மக்களும் ஒன்று சேர்ந்து இந்தத் தேர்தல்  பொதுசன் ஐக்கிய மக்கள் முன்னணியில் வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்து மக்கள் பிரதிநிதித்வத்தைப் பெற்றுக்கொள்வதே சிறந்த வழியாகும். எமது இளைய தலைவர் நாமல் ராஜபக்ஷவின் தலைமையின் கீழ் ஒன்றுபட்டு மேல் தென் மாகாண சபைத் தேர்தலின் வெற்றிக்கு முஸ்லிம் வாக்காளர்கள் பங்காளியாக நாம் இருப்போம் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

1 comment:

Powered by Blogger.