வீட்டிலேயே உயர்தர மருத்துவமனை அமைக்கும் ஷூமாக்கரின் மனைவி
பனிச்சறுக்கு விளையாட்டின் போது ஏற்பட்ட விபத்தில் சிக்கி சுயநினைவை இழந்து கடந்த 3 மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பார்முலா ஒன் கார் பந்தய வீரர் ஷுமாக்கருக்காக, அவரது மனைவி, வீட்டிலேயே உயர்தர மருத்துவமனையை அமைத்து வருகிறார்.
10 மில்லியன் பவுண்ட் செலவிட்டு, அதிநவீன உபகரணங்களுடன் கூடிய மருத்துவமனையை வீட்டிலேயே அமைத்து, அதில் தனது கணவர் சிகிச்சை பெறுவதற்கு திட்டமிட்டுள்ளார் ஷுமாக்கரின் மனைவி கொரின்னா.
நாங்கள் எப்போதுமே அவருடன் மருத்துவமனையிலேயே தான் இருக்கிறோம். ஆனால், தற்போது அவர் எங்களுடன் வீட்டில் இருக்க வேண்டும் என்று விரும்புகிறோம். அதனால்தான் இந்த திட்டத்தை செயல்படுத்துகிறோம் என்று அவர்களது நெருங்கிய உறவினர்கள் கூறியதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
Post a Comment