இராணுவ அல்லது சர்வதேச ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்ற சரத் பொன்சேக்கா திட்டம்..?
ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகாவிடம் இராணுவ சதிப்புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்றும் திட்டம் ஒன்று இருப்பதாக அவரது ஊடக செயலாளராக பணியாற்றிய சஞ்ஜீவ சமரசிங்க தெரிவித்துள்ளார்.
ரந்திவ என்ற சிங்கள வார இதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அதில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இராணுவத்தில் பணிப்புரியும் பல சிரேஷ்ட அதிகாரிகள் பொன்சேகாவை சந்திக்க வந்து போவதுண்டு.
புற்களை நட செய்யவும் கூலி வேலைகளில் ஈடுபடுத்துவதாலும் இராணுவத்தினர் வெறுப்படைந்து, கோபத்தில் இருப்பதாக பொன்சேகாவை சந்தித்த இராணுவ உயர் அதிகாரி ஒருவர் கூறியிருந்தார்.
ஆயுதம் தாங்கிய இராணுவத்தினர் இப்படி கோபம் கொள்வது பாரிய அழிவுக்கான முன் அடையாளம் என அந்த அதிகாரி குறிப்பிட்டிருந்தார்.
அப்போது கருத்து வெளியிட்ட பொன்சேகா, பாதுகாப்புச் செயலாளர் கேர்ணல் பதவியில் இருந்த போது அவருக்கு எதிராக இராணுவத்தில் கிளர்ச்சி ஏற்பட்டதாகவும் அப்படியான ஒன்று மீண்டும் ஏற்படும் எனவும் அப்போது தான் இராணுவத்திற்கு தலைமையேற்பேன் என்றும் தெரிவித்திருந்தார்.
இராணுவ சதிப்புரட்சியில் முடியாது போனாலும் சர்வதேச ஒத்துழைப்புடன் ஆட்சியை கைப்பற்றும் திட்டங்களை பொன்சேகா கொண்டுள்ளார் எனவும் சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment