Header Ads



இதற்குத்தானா ஆசைப்பட்டாய் பாலகுமாரா...?


(றிசானா பசீர்)

இன்று படித்தோர் பாமர மக்கள் எல்லோருக்கும் அரசியல் இலாபமீட்ட வேண்டும் என்பதும்இ அரசியல் பிரபல்யம் பெறவேண்டும் என்பதும் காலத்தின் கட்டாயமாகி விட்டது. இதற்கு உதாரணமாக அண்மையில் அமெரிக்கத் துாதராக ஓர் தேயிலைத்தோட்ட முதலாளி நியமனம் பெற்றதைக் குறிப்பிடலாம். இதுபற்றி எதிர்க்கட்சியில் இருந்து விமர்சனங்களும் எழுந்தன.

கல்முனை மாநகர சபையை கைப்பற்ற வேண்டுமென்ற அமைச்சர் அதாவுள்ளாவின் ஆசை நிறைவேறப் போகின்றது. ஆசையில் சின்ன ஆசை பெரிய ஆசை என இரு வகை உண்டு. இது அமைச்சர் அதாவுள்ளாவின் சின்னத்தனமான சின்னச் சின்னச் ஆசையாகும்.

ஒரு நகர சபையிலோஇ மாநகர சபையிலோ போட்டியிட்டு அதிக வாக்குகளால் வெற்றி பெறும் நபருக்கே அந்த ஆசனம் தொடராக வழங்கப்பட வேண்டும் என்பது விதி. இதை யாரும் மாற்றக்கூடாது. அரசியலை தக்க வைத்துக் கொள்வதற்கு அதைக் கூறு போடக்கூடாது. ஏனெனில் இது கிரிக்கட் மெச்சோ புட்போல் மெச்சோ அல்ல. இது ஒரு தனி நபர் ஈட்டிய தனிப்பட்ட வெற்றி. குத்தகையை வேறு வேறு நபருக்கு மாற்றி மாற்றி கொடுப்பதற்கு இது விவசாயமோஇ வர்த்தகமோ அல்ல. இது அரசியல் சூதாட்டம். அவருக்கு இரண்டு வருடம்! இவருக்கு இரண்டு வருடம்!! இது என்ன குத்தகை நிலமா ? வர்த்தக நிலையமா ? இறைச்சிக்கடையா ?

'ஜாதிகள் இல்லையெடி பாப்பா' என்று பாடிய பாரதியாருக்கு கொள்ளுப் பேர்த்திகளும் பிறந்து விட்டனர். ஆனால். இந்தியாவில்  ஜாதி வெறி இன்னும் ஒழியவில்லை. சாய்ந்தமருது கல்முனை என்ற பிரதேச வாதமும் உங்களை விட்டு ஒழியப்போவதில்லை.

படித்தஇ பாமர மக்கள் உங்களுக்கு கையில் கறையைத் தேய்த்து பொருத்தமான உங்களைத் தெரிவுசெய்கின்றனர். ஆனால் நீங்களோ பொருத்தமற்றவர்களாக மாறி விடுகின்றீர்கள். யாரை மக்கள் அதிக வாக்குகளால் தெரிவு செய்கின்றனரோ அவருக்கத்தான் அந்த இடம் வழங்கப்படவேண்டும். இது பங்கு வர்த்தகம் அல்ல. இலாபத்தை இருவருக்குப் பங்கு போட.

அமைச்சர் அஷ்ரப் சீனப்பெருஞ்சுவர் போன்று முஸ்லிம் காங்கிரசை  எழுப்பினார். ஆனால் அந்தச்சுவரை இன்றைய தலைமைக்கு தக்கவைக்கத் தெரியாமல் துண்டு துண்டாக உடைத்துத் தள்ளுகின்றது. இனி வருங்காலங்களில் சுவர் உடைவதைத் தடுத்துக்கொள்ள வேண்டும்.

மறைந்த தலைவர் அஷ்ரப்புக்கு ஒரு விடயம் மட்டும் தெரியாமல் போய் விட்டது. அது தான் 'ஏகாதிபத்தியத்துக்கு அடிபணிவது என்னும் பெரும் பண்பு'. அது தெரிந்திருந்தால் இன்று இந்த இடியப்பச் சிக்கல் வராது. நீங்கள் எல்லோரும் அஷ்ரப்பின் பட்டறை உருக்கிலிருந்து வார்க்கப்பட்ட உருவங்கள்தான்.  உங்களுக்கள் ஒற்றுமையில்லை. உடன்பாடு இல்லை. பிரதேச வாதத்தை துாண்டுவதிலும் தேசங்களைத் துண்டாடுவதிலும் உங்களுக்குள்ள ஆர்வத்தைக்கண்டு மனமுடைகின்றேன். உங்கள் பிரதேச பக்தி கண்டு வியப்படைகின்றேன். சிராஸ் தம்பிக்கு மரத்தை வெட்டி வீழ்த்த எப்படி மனம் வந்ததோ தெரியவில்லை. பொறுமையுடையோராயின் நீங்களே மேலோங்குவீர்கள் என திருக்குரான் –(ஞரசயn) சொல்லுகின்றது. ஆனால் சிராஸ் தம்பி பொறுமை இழந்து விட்டார். மேலும் அவமானப்படுத்தப் பட்டிருக்கிறார் என்பதும் எனக்குத் தெரிகின்றது. பிரதேச வாதத்திற்கு வித்திட்டவர்கள் கல்முனை மக்களே !

ஒருவர் பெற்ற தாய்க்கும் பிறந்த பொன்னாட்டிற்கும் கடமைப்பட்டிருக்க வேண்டும். 'பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானிலும் நனி சிறந்தனவே' என்ற புரட்சிக் கவிஞன் பாரதியாரின் வாக்கு நினைவிற்கு வருகின்றது. பாரதியார் தேசாபிமானத்தை மதமாகக் கொண்டிருந்தார். விடுதலைப் போரிலே அவர் இரண்டறக் கலந்தவர்.

'யாதும் ஊரே யாவரும் கேளிர்!'

என்பது மதாபிமானக் கொள்கை. இதற்குட்பட்டதே பாரதிக்கு இருந்த தேசாபிமானம். அவர் தேசாபிமானியாக இருந்தது குறுகிய உணர்வாலன்று; பிற தேசத்தின் ஆதிக்கத்திலிருந்து தன் தேசத்தை விடுவிக்க வேண்டுமென்ற விருப்பத்தாலாகும். அவர் காலத்திலேஇ ஆறு லட்சம் வெள்ளையர்கள் முப்பது கோடி இந்தியர்களை அடிமைப்படுத்தி அவர்கள் மீது ஆதிக்கம் செலுத்தினார்களேஇ அந்தக் கொடுமையை அழிக்கத்தான் மனிதாபிமானியான பாரதியார் தேசாபிமானியாகவும் வாழ்ந்தார். ஒவ்வொரு இந்தியனையும் தேசாபிமானியாக்கப் பாடுபட்டார்.  'எல்லாரும் ஓர் குலம் எல்லாரும் ஓரினம். ஆணென்ன பெண்ணென்ன எல்லாம் ஓரினந்தான் !

  சாய்ந்தமருதின் தாய்ப்பாசம் தேசபக்தியை மெச்சுகின்றேன். விடுதலைஇ விடுதலை என்று வீரமுழக்கம் இடுகின்ற - விடுதலை வேட்கையுடைய தேசபக்தன் சிராஸை வாழ்த்துகிறேன். பாரதியார் விடுதலை வேட்கையுடைய தேசபக்தர். விடுதலைப் போரில் ஈடுபட்டுச் சிறைபுகுந்த தியாகி! நெல்சன் மண்டேலா 27 வருடத்தை சிறையில் கழித்த ஞானி. வனவாசம் போன ராமன். நாங்கள் வனவாசம் புகவும் மாட்டோம் சிறை வாசம் போகவும் மாட்டோம். ஆனால் ஆடம்பர சொகுசுக்காரில் போவோம். இது தான் என்னுடைய  எங்களுடைய விடுதலைப் போரும் அரசியலும். இதைக் காலத்தின் கோலம் என்பர் சிலர் . விதியின் விளையாட்டென்பர் வேறுசிலர் உண்மையாக தாயக மண்ணை நேகிக்கத்தான் வேண்டும்.

' சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போலவருமா ' என்ற இளைய ராஜாவின் பாடல் சாய்ந்தமருதைச் சொக்க வைக்கின்றது.

நண்பர்களே! நான் உறுதியாகச் சொல்லுகிறேன், நம்புங்கள்!  உண்மை உணர்வோடு சொல்கிறேன், நம்புங்கள்!  சத்தியம் செய்து சொல்லுகிறேன், நம்புங்கள்!  நாம் ஒற்றுமை எனும் கயிறை இறுகப் பற்றிப்பிடித்துக் கொள்ள வேண்டும்.

முடிவாக கல்முனை சிராஸ் மேயருக்கு மக்கள் வழங்கிய ஆணை நான்கு (4 ) வருடங்களாகும். அதை எவ்வாறு முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் தட்டிப்பறிப்பார் ? நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே!!



4 comments:

  1. "WOW" always I support through Sir, Ariff Samsudeen to Hon. Athaullah, Yes, I like it.

    ReplyDelete
  2. Bharathiyar paruppu ellaam ippa vehaathu paarunko.

    ReplyDelete
  3. "Rizana badeer" I agree ur full statement of this article but see this "bawa" he can't understand even baradiyaar.this "bawa"people cant be United the muslim ummha

    ReplyDelete
  4. எல்லாவற்ரையும் சொல்லிவிட்டு நீங்களே அவற்ரையெல்லாம் மறந்தாபோல் முடித்திருக்கின்றீர்கள் நான்கு வருடமோ நாப்பது வருடமோ மக்கள் ஆனை வழங்கியிருக்கலாம் ஆனால் பக்கத்து வீட்டு காரன் பட்டினி கிடக்க நீங்கள் மட்டும் வயிரு நிரைத்தால் சரியா அதைதான் இஸ்லாம் சொல்லியிருக்கா so இருப்பதில் பாதியை பக்கதில் இருக்கும் நமது சகோதரர்களூக்கு கொடுத்ததால் ரவூப்ஹக்கீம் குற்றவாலி தலமைகள் சரியில்லை என்ரு வீராப்பு பேச்சும் விலகி ஓட்டமும் நாம் இதில் இருந்து புரிகிறது யார் சுயநல்வாதிகள் என்ரு நாம் திருந்தாத வரையில் இந்த நாடே திருந்தாது இதுதான் உன்மை[அப்படிபார்தால் முதல் அமைச்சர் பத்விகூட பாதி தேவையில்லை என்ரு சொல்கின்ரீர்]

    ReplyDelete

Powered by Blogger.