தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டாலும் கண்காணிப்பது முக்கியமானது – மகிந்த ராஜபக்ச
சிறிலங்காவில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், தொடர்ச்சியான கண்காணிப்பு மிகவும் முக்கியமானது என்று அதிபர்மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
மியான்மர் தலைநகர் நேபிடோவில், இன்று 04-03-2014 நடந்த வங்காள விரிகுடா நாடுகளின் தொழில்நுட்ப பொருளாதார பல்துறை ஒத்துழைப்பு அமைப்பின் தலைவர்களின் உச்சி மாநாட்டில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
சிறிலங்காவில் தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்டு விட்டாலும், தீவிரவாத அமைப்புகளின் அனைத்துலக வலையமைப்புகள் தொடர்ந்து செயற்படுவதால் தொடர்ச்சியான கண்காணிப்பு முக்கியமானதாக உள்ளது. தீவிரவாதம் உலகில் எங்கெல்லாம், உருவெடுக்கிறதோ அது ஒட்டுமொத்த நாடுகளினதும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகும்.
மூன்று பத்தாண்டுகளாக தீவிரவாதத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது எமது நாடு. அதன் உண்மையான மனித மற்றும் பொருளாதார செலவு என்னவென்று நாம் அறிவோம். துரதிஷ்டவசமாக, அந்தக் காலங்களில் சிறிலங்காவினால் பொருளாதார ரீதியாக இயங்க முடியவில்லை.
தீவிரவாதம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், சிறிலங்காவின் பொருளாதாரம், கணிசமாக அதிகரித்து, 7 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது ” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Post a Comment