புதிய தூதுவர்கள் பதவியேற்றனர்
இலங்கைக்கான புதிய உயர்ஸ்தானிகர் ஒருவரும் ஐந்து புதிய தூதுவர்களும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிடம் இன்று (10) தங்களது நியமனக் கடிதங்களைக் கையளித்தனர்.
இலங்கைக்கான நைஜீரிய உயர்ஸ்தானிகராக எஸ்.யூ.அஹமட் நியமிக்கப்பட்டுள்ளார். அத்துடன், ஆஸ்திரியாவின் தூதுவராக பெர்னாட் வ்ரபெட்ஸ், ஸ்லோவேனியாயின் தூதுவராக திருமதி.டராஜ்பவ்டாஸ் குரெட், பின்லாந்தின் தூதுவராக ரவூலி சுய்க்கானென், சுரினாமின் தூதுவராக திருமதி. ஆஷ்னா டபிள்யூ.ஆர்.கன்ஹாய், ஓமான் தூதுவராக அல் ஷெயிக் ஜும்மா பின் ஹம்டான் பின் ஹஸன் அல் மலிக் அல் ஷெஹி ஆகியோரே தங்களது நியமனக் கடிதங்களை கையளித்துள்ளனர்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று முற்பகல் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவும் கலந்துகொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Post a Comment