Header Ads



முஸ்லிம்களின் பிரச்சினைகளை கதைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு உரிமையில்லை - பைசர் முஸ்தபா


முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியலில் ஈடுபட முடியாது என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் 22-03-2014 இடம்பெற்ற சிறிலங்கா சுதந்திர கட்சியின் செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர் இந்த கருத்தை வெளியிட்டார். தொடர்ந்து கருத்து வெளியிட்ட பிரதியமைச்சர் பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா, 

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு முஸ்லிம் மக்களின் பிரச்சினை தொடர்பாக கதைப்பதற்கு உரிமையில்லை எந்தவொரு தருணத்திலும் முஸ்லிம் மக்களுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் அரசியல் செயற்பாடுகளை மேற்கொள்ள முடியாது.

தாம் பிரித்தானியாவுக்கு சென்ற போது அங்கு முஸ்லிம் மக்கள் தொடர்பில் புலம்பெயர்ந்தவர்களால் கூடிய கவனம் செலுத்தப்பட்டதாக குறிப்பிட்டார். முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை போலியாக்கி தமது பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அவரகள் முனைகிறார்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளால் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட இன்னல்கள் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் எந்தவிதமாக கருத்துக்களையும் வெளியிடவில்லை என்று பிரதியமைச்சர் பைசர் முஸ்தபா குற்றம்சுமத்தினார்.

3 comments:

  1. Every human-being has right except politicians

    ReplyDelete
  2. neegalum pesa maatiga ,pesura wangalukkum pesa veda maatiga

    ReplyDelete
  3. இவர்களைத்தான் சொல்லுவது "வைக்கோற்பட்டரை நாய்கள்" என்று ஒரு பழமொழியுண்டு.

    இலங்கையில் தமிழ் இனம் பலவீனம் கண்ட அக்காலத்தில் SLMC உடன் இனைந்து சிலவிடயங்களை சாதிக்க நினைத்து பேச்சுவார்த்தைகளுக்கு அழைத்தது,ஆனால் அவர்களோ பெறியவார்த்தைகள் பேசி,உடன்படவில்லை.இப்போ,தமிழர் அரசியல் கூட்டனிக்கட்சிகளை SLMC தான் காலில் விழுந்து கூப்பிடவண்டிய நேரம் வந்துள்ளது. இப்போ தமிழர்களுக்கு சர்வதேச கண்கானிப்பு அதிகமாகிவிட்டது.

    எனவே,இந்த பைஸர் புஸ்தபா சொல்லுவதைப்போல்,எதையும் நாம் காதில் போட்டுக்கொள்ளக்கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.