அமைச்சர் பந்துல குணவர்த்தனாவின் மகன் பொலிஸாரிடம் சரண்
மாத்தறை பொலிஸில் இன்று 05-03-2014 சரணடைந்துள்ள கல்வியமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகனை காவலில் வைத்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
கடந்த 20ம் திகதி மாத்தறை பிரதேசத்தில் மஞ்சற்கடவையால் நடந்து சென்ற குடும்பஸ்தர் ஒருவர் மீது அமைச்சரின் மகன் ஜீப் வண்டியால் மோதிவிட்டுச் சென்றுள்ளார். இவ்விபத்துச் சம்பவத்தின் போது காயமடைந்த குடும்பஸ்தர் நேற்று மாலை சிகிச்சைகள் பலனின்றி உயிரிழந்தார்.
இந்நிலையிலேயே, அமைச்சர் பந்துலவின் மகன் இன்று காலை பொலிஸில் சரணடைந்துள்ளார். இவரை இன்று மாத்தறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ் பேச்சாளர் மேலும் கூறினார்.
அமைச்சரின் மகனான சத்துர பசன் குணவர்த்தன அமெரிக்காவில் கல்வி பயின்று வருகிறார். இலங்கை வந்திருக்கும் அவருக்கு சாரதி அனுமதிப் பத்திரம் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து சம்பவம் தொடர்பில் மாத்தறை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்த கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தனவின் மகன் சத்துர பசன் குணவர்த்தன பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
மாத்தறை பொலிஸாரால் இன்று மாத்தறை பிரதான நீதவான் முன்னிலையில் சந்தேகநபர் ஆஜர் செய்யப்பட்ட போது 2 லட்சம் ரூபா சரீர பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
தீர்ப்ப சொல்றம் கேளுங்கோ.. மஞ்சக்கோட்டை கடந்தவருர் குடிபோதையில் கடந்த காரணத்தால் வாகனம் ஓட்டியவர்மீது குற்றமில்லை என்பது ஊர்ஜிதமாகின்றது.
ReplyDeleteஅத்துடன்... க்ஜ்ச்ச்க்ஜ்ல்க்ஜ்ச்ல்க்ஜ்ல்ஜ் ஜ்ச்ல்க்ஜ்ச்ல்க்ல்ச்ஜ் ஜ்க்ல் ம்ச்க்ல்சிர் க்ர்ஜ்ல்ஜ்ல்ச் க்ச்ல்ச்ஜ்ல் க்ஜ்ஃப்க்ஜ்கொரிஒக்ஜ் க்ச்
ஆகவே அமைச்சரின் மகனை விடுதலை செய்து இந்த வளக்கை தள்ளுபடி செய்கின்றோம்.....
அதுமட்டும் அல்ல, சாரதி அனுமதி பத்திரம் இல்லாததால் அவருக்கு 500 ரூபா அபராதம் விதிக்கிறோம்.
ReplyDelete