பஸிலின் கனவு பலிக்கவில்லை - கம்பஹாவில் ஆளும் கட்சிக்கு முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை
மேல் மாகாண சபைக்கான, கம்பஹா மாவட்ட தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு முஸ்லிம் வேட்பாளராக நீர்கொழும்பு பிரதிமேயர் சகாவுல்லா நிறுத்தப்பட்டிருந்தார்.
இவருக்கு ஆதரவாக முதலமைச்சர் வேட்பாளர் பிரசன்ன ரணதுங்க, நிமல் லான்சா ஆகியோரும் வாக்குகளை பெற்றுக்கொடுத்து முஸ்லிம் வேட்பாளர் சகாவுல்லா கம்பஹா மாவட்டத்திலிருந்து இம்முறை நிச்சயம் தெரிவு செய்யப்படுவாரென அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வாக்குறுதி வழங்கியிருந்தார்.
எனினும் குறைந்தளவு வாக்குகளை மாத்திரமே பெற்றுள்ள சகாவுல்லா மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்படவில்லை.
இதுகுறித்து தொலைபேசி மூலமாக ஜப்னா முஸ்லிம் இணையத்திற்கு கருத்து வெளியிட்ட அவர்,
முஸ்லிம்கள் பெருமளவு வாக்களித்திருந்தால் நான் மேல் மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்டிருப்பேன். இருந்தபோதும் தாம் குறைவான வாக்குகள் பெற்றமை தமக்கு ஆச்சரியத்தை தருவதாக சுட்டிக்காட்டினார்.
Post a Comment