ஜெனீவா தீர்மானம் - கண்டி முஸ்லிம்களின் கண்டன அறிக்கை
(மொஹொமட் ஆஸிக்)
ஜெனீவா நகரில் அமைந்துள்ள ஐநாவின் மனித உறிமைகள் ஆணைக்குழுவில் நிரைவேற்றப்பட்ட மனித உறிமை மீரல் சம்பந்தமான இலங்கைக்கு எதிரான பிரேரனையை எதிர்த்து இன்று 2014 03 28 ம் திகதி கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா மற்றும் கண்டி வர்த்தக சங்கம் மீராமக்கம் பள்ளிவாசல் இனைந்து கண்டன அறிக்கை ஒன்றை கண்டி மாவட்ட செயலாளர் காமினீ செனெவிரத்னவிடம் கையளித்தனர்.
இன்று மாலை ஜும்ஆ தொழுகையை தொடர்ந்து கண்டி மீராமக்கம் பள்ளியிலிருந்து நடையாக வந்த முஸ்லிம் குழுவினர் கண்டி மாவட்ட செயலகத்தில் வைத்து மாவட்ட செயலாளர் காமினீ செனெவிரத்னவிடம் இவ் அறிக்கையை கையளித்தனர்.
இங்கு உரையாற்றிய கண்டி சிட்டி ஜம்மியதுல் உலமா சங்கத்தின் தலைவர் மவ்லவி பஸ்லுல் ரஹ்மான், இலங்கையின் யுத்தம் முடிவுற்று இனங்கள் ஒற்றுமையாக வாழும் இக் காலப்பகுதியில் இவ்வாரான பிரேரனைகள் நிரைவேற்றுவதன் மூலம் மீண்டும் ஒற்றுமை சீர் குலையும் என தெரிவித்தார். இத் தீர்மான அறிக்கையை ஐநா சபைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாரும் அவர் மாவட்ட செயலாளரிடம் வேண்டுகோல் விடுத்தார்.
இங்கு கறுத்து தெரிவித்த கண்டி மாவட்ட செயலாளர் காமினீ செனெவிரத்ன, வெளிவிவகார அமைச்சின் ஊடாக இவ் வறிக்கை ஐநா சபைக்கு அனுப்புவதற்கு நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
Post a Comment