Header Ads



எமக்கென்று பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு மஹிந்த ராஜபக்சவிடமே செல்வோம் - அமீர் அலி

(அஷ்ரப்ஏ சமத்)

முஸ்லீம்களது உள்வீட்டுப் பிரச்சினைகளை தூக்கிக்கொண்டு முஸ்லீம் கட்சியொன்று ஜெனிவாவுக்குச் சென்றுள்ளது. ஆனால் எமக்கென்று ஒரு பிரச்சினை வந்துவிட்டால் அதனை தீர்ப்பதற்கு அல்லது  கதைப்பதற்கு எமது கட்சி ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடமே செல்வோம்.   என முன்னால் அமைச்சரும் கிழக்கு மாகாணசபை உறுப்பினருமான அமீர் அலி தெரிவித்தார்.

மேற்கண்டவாறு நேற்று இரவு மட்டக்குழியில் உள்ள அலி வத்தையில்  அகில இலங்கை மக்கள் காங்கிரசின் வேட்பாளர் செனவிரத்தின அவர்களை ஆதரித்து உரையாற்றும்போதே இவ்வாறு அமீர் அலி தெரிவித்தார்.

தற்போதைக்கே கொழும்பில் பாயிசும், செனவிரத்தினவும் எமதுகட்சியில் மாகணசபை உறுப்பினராகவது முடிவாயிற்று. . செனவிரத்தின 3 முறை சுயேற்சையாக மட்டக்குழியில் தேர்தலில் வெற்றி பெற்று கொழும்பு மாநகர சபையில் உறுப்பினாராக சென்றுள்ளார். தற்பொழுதும் அவர் மாநகர சபை உறுப்பினராக இருந்து இப்பகுதி மக்களுக்கு சிறந்த சேவை செய்கின்றார். அவரும் பாயிசும் நிச்சயம் மாகாணசபை செல்வார்கள் என்பதனை நாங்கள்  தீர்மாணித்து விட்டோம். எனக் கூறினார்.

ஆகவேதான்  உங்கள் முன் பேசிய பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ் அவர்கள் பொருளாதார அமைச்சர் பசில் ராஜபக்சவோடு கதைத்து மட்டக்குழி பிரதேசத்தில் உள்ள குறைபாடுகளை இனம் கண்டு செனவிரத்தின ஊடாக  செய்து தருவதாக இங்கு வாக்குருதியளித்துள்ளதாகவும் அமீர் அலி தெரிவித்தார். 

அமைச்சர் றிசாத்பதியுத்தீன் பிரதியமைச்சர் ஹிஸ்புல்லாஹ், மாகணசபை உறுப்பினர் சுபைர் ஆகியோறும் இங்கு உரையாற்றினாhகள்.

1 comment:

  1. you have to complain with allah.our responder not mahinda.

    ReplyDelete

Powered by Blogger.