பொதுபல சேனாவும், றிசாத் பதியுதீனும்..!
(இர்ஷாத் றஹ்மத்துல்லா)
ஒரு ஜனநாயக நாடொன்றில் மனிதன் வாழ்வதற்கு தேவையான அடிப்படைகளுல் ஒன்றாக வீடு காணப்படுகின்றது.இந்த வீட்டினை அமைப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் எவ்வளவு சிரமம் என்பது யாவரும் அறிவார்கள்.பொருளாதார நிலைமை இதற்கு பிரதான காரணமாகும்.அதே பால் வடக்கில் வாழ்ந்த முஸ்லிம்கள் பாசிச புலிகளினால் வெளியேற்றப்பட்டதன் பின்னர் இம்மக்களின் வாழ்வுரிமை கேள்விக் குரியானதாகவே இருந்தது.வந்தாரை வாழ வைக்கும் ஊர் புத்தளம் என்பது நாடறிந்த உண்மையாகும்.அந்த வகையில் இந்த மக்கள் தற்காலிகமாக புத்தளம்,கல்பிட்டி,முந்தல்,வண்ணாத்தவில்லு பிரதேச செயலகப் பிரிவுகளில் தனியார் காணிகளிலும்,அரச காணிகளிலும் தங்க வைக்கப்பட்டனர்.அன்றை யுத்த சூழ் நிலையின் காரணமாக இடம் பெயர்வுக்குள்ளான இம்மக்கள் தமது சொந்த மண்ணில் மீள்குடியேற முடியுமா ? என்ற கேள்வியே இருந்தது.கடும் யுத்தம் சொத்தழிவுகள்,இன சுத்திகரிப்புக்கள் இதற்கு பிரதான காரணிகளாகும்.
இந்த நிலையில் இம்மக்கள் தமது குடும்பங்களுடன் வாழ வேண்டும்,இவர்களை வாழ செய்வது ஆட்சியில் உள்ளவர்களின் கடமைனெ எண்ணினர்.அன்று யுத்தத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்கள் ஆயிரக்கணக்கான வீடுகளை அம்மக்களுக்கு கட்டிக் கொடுத்தனர்.இந்த வீடுகளை நிர்மாணிக்க அனுமதி வழங்கியது யாரென்பதை தேடிப்பார்க்க வேண்டும்.புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த பிரதேசங்களில் காணி அதிகாரம் யார்வசம் இருந்தது,அங்கிருந்த அரச அதிகாரிகளின் அதிகாரங்கள் என்ன ?என்பன பற்றி தற்போது தேடிப்பார்க்கின்ற போது தான் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் வகிப்பகம் ,பெறுமானம் என்னவென்று தெரியும்.
இந்த நிலையில் இவ்வாறு இடம் பெயரந்த புத்தளம் மாவட்டத்திலும் ,ஏனைய மாவட்டத்திலும் வாழந்து வந்த மக்களை அவர்களது சொந்த மண்ணில் மீள்குடியேற்றுவது யார்,அவர்களுக்கான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பது யார் ,இந்த பணியினை முன்னெடுப்பது யாரென்ற கேள்விகள் அடுக்கடுக்காக சமூகத்தின் மத்தியில் எழ ஆரம்பித்தன.எவர் குத்தினாலும்,எமக்கு தேவை அரிசி என்பதற்கினங்க பலர் குத்திப்பார்த்தார்கள்,ஆனால் அது சரியாக வில்லை,அவை விழளுக்கு இரைத்த நீராகியது.திட்டமிடப்படாத நடை முறைகளும்,அரசியல் முதிர்ச்சியின்மையும் இதற்கு காரணமாகும்.
அதே வேளை இந்த மீள்குடியேற்றப் பணிகளை முன்னெடுக்க தேவையான ஆளணியும் இன்மை மற்றுமொரு காரணமாக நோக்க வேண்டியுள்ளது.இந்த நிலையில் யுத்தம் முடிவடைந்து சமாதானம் ஏற்பட்டதிலிருந்து இன்று வரை இந்த மீள்குடியேற்றம் வெற்றி பெறாத ஒன்றாகவே இருக்கின்றது.அரசாங்கம் சர்வதேசத்திற்கு சொல்லுவது இலங்கையில் அனைவரும் அவர்களது பிரதேசங்களில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டுவிட்டார்கள் என்று,அன்றோ பாவம் இந்த முஸ்லிம்களது மீள்குடியேற்றம் இன்னும் முற்றுப் பெறாத நிலையில் உள்ளது.ஜெனீவா மனித உரிமை மாநாடு நடை பெறும் இந்த தருணத்தில் சர்வதேச புலம் பெயர் சமூகம் மீள்குடியேற்றப்படாத முஸ்லிம்கள் தொடர்பில் ஏன் நடவடிக்கையெடுக்க கூடாது என்று இடம் பெயர்வுக்குள்ளான மக்கள் பேசிக் கொள்கின்றனர்.
ஒடுக்கப்பட்ட ஒரு அகதி சமூகத்தின் அரசியல் தலைமைத்துவம் தனியாக நின்று இந்த மீள்குடியேற்றம் தொடர்பில் போராடும் போது ஏனைய முஸ்லிம் தலைமைகள் இதற்கு எதிராக காட்டிகொடுப்புக்களை செய்கின்றதே ஒழிய,இதனை வெற்றி கொள்ள தேவையான பலத்தை வழங்காத சுயநல அரசியல் நகர்வுகளை செய்து கொண்டு இருப்பது கவலைத்தரும் ஒன்றாகும்.தமது மண்ணை தமக்கு தாருங்கள் என்று சத்தியாக்கிரகம் இருக்கும் மக்களுக்கு மத்தியில் எமது நிலைப்பாடு என்ன ? போராட்டம் என்பது தான் வெற்றி என்று சிந்தித்த காலம் மாறி இனக்கழுத்தறுப்புக்களே மகுடம் என சிந்திக்கும் தலைமைகளுக்கு மத்தியில் எமது வட புல முஸ்லிமக்ளின் மீள்குடியேற்றம் வெறும் பேச்சாகவே இருக்கும்.
மன்னார் மாவட்டத்தில் முசலி பிரதேச செயலகப் பிரிவு என்பது பெரும்பான்மை முஸ்லிம்களை கொண்ட பிரதேசமாகும்,இந்த பிரதேசத்தின் பிரதேச சபையின் ஆட்சி முஸ்லிம் தலைமையிடம் இருக்கின்றது.இந்த நிலையில் கூட மீள்குடியேற்ற செயற்பாடுகளை செய்ய முயற்சிக்கின்ற போது,பல்தரப்பு தடைகள் தொடராக வந்த வண்ணமுள்ளன.குறிப்பாக இப்பிரதேச முஸ்லிம்களது காணிகள் பாதுகாப்பு தரப்பினால் சுவீகரிக்கப்பட்டுள்ளன.இதனை விடுவிப்பது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம் பெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில் வில்பத்து காட்டினை அழித்து முஸ்லிம் வலயம் உருவாக்கப்படவதாக பொது பலசேன ஆதரமற்ற குற்றச்சாட்டுக்களை முன் வைத்து வருகின்றது.முஸ்லிம் விரோத போக்கிணை நாதமாக கொண்டு செயற்படும் பொதுபலசேனா இந்த நாட்டு மக்களுக்கு கிடைத்திருக்கும் சாபக் கேடாகும் என்றால் மிகையாகாது.அண்மையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் ராயப்பு ஜோசப் அவர்கள் தொடர்பில் விமர்சித்துள்ள இந்த அமைப்பினர்,இன்று முஸ்லிம்கள் தொடர்பில் பிழையான பிரசாரங்களை கொண்டு செல்கின்றனர்.வடக்கிலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்ட போதும்,முள்ளி வாய்க்காலில் இருந்து தமிழ் மக்கள் இடம் பெயர்ந்து வந்த போதும் இது குறித்து கவலைப்படாத அக்கறையற்ற இந்த பலசேனா,இலங்கையின் ஒற்றுமைக்கும்,இறமைக்கும்,சட்டத்திற்கும் எதிரான போக்கினை கடை பிடிக்கின்றது.இதுகுறித்து அரசாங்கம் மௌனம் சாதிப்பதன் பின்னணி என்ன என்பது மக்களுக்கு தெரியவந்துள்ளது.
பெரும்பான்மை இன ரீதியான சிந்தணையின் வெளிப்பாடே இவ்வறான பலசேனாக்கள் உருவாக்கத்திற்கான காரணம்.முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் தலைமைகளுக்கு எதிராகவும் பேசும் இனவாத அமைப்பான பொதுபலசேனாவின் செயற்பாடுகளை முடிவுக்கு கொண்டுவரவேண்டும்.இவர்களை முடக்குவதற்கு நியாயவாதிகள் முன்வரவேண்டும் என்பது காலத்தின் தேவையாகும்.குட்டக் குட்டக் குணிபவன் முட்டாள் என்பது பழைமொழி.இதற்கு மாறாக குட்டுகின்றவர்களுக்கு ஒரு அடியேனும் கொடுப்போமெனில் அது தான் பாதுகாப்பாகும்.
மன்னார் மாவட்டத்தில் இன்னும் எத்தனை ஆயிரம் குடும்பங்கள் அடிப்படை வசதிகள் இன்றி மீள்குடியேற முடியாமல் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்.இவர்களுக்கு பல அமைப்புக்கள் உதவி செய்ய முன்வந்துள்ளன.இலங்கைக்குள் வாழும் மக்களுக்கு உதவி செய்யும் வகையில் பல முஸ்லிம் நாடுகள் விருப்பம் கொண்டுள்ளன.இந்த நாடுகள் வெளியேற்றப்பட்ட முஸ்லிமகளுக்கு அவர்களது சொந்த மண்ணில் வெீடுகளை அமைத்து அவர்களை வாழச் செய்யும் பணிகளை செய்ய முன்வந்த போது,அதற்கு உதவியாளராக அந்த மக்களின் வாக்குகளை பெற்ற அரசியல்வாதி என்ற வகையில் அமைச்சர் றிசாத் பதியுதீன்,பாராளுமன்ற உறுப்பினர் ஹூனைஸ் பாருக் ஆகியோர் செயற்படுவது எந்த விதத்தில் பிழையாகும்.
இனங்களுக்கிடையில் முறுகலை ஏற்படுத்தி மீண்டும் இன அழிவினை மேற்கொள்ளும் பொதுபல சேனா போன்ற இன வாத அமைப்புக்களுக்கு மத்தியில் இன ஒற்றுமையினை விரும்பும், புலிகளினால் விரட்டப்பட்ட முஸ்லிம் மக்களை ஓரிடத்தில் வாழச் செய்வது மனிதாபிமான செயலல்லவா ?
ஆதரமற்ற கட்டுக்கதைகளை புனைந்து முஸ்லிம்களுக்கு எதிராக செயற்படும் பொதுபலசேன,உண்மையினை அறிந்து கொள்ள முரண்டுபிடிப்பது ஏன் என்பது மர்ம்மமாகவே உள்ளது.பௌத்த மதம் இன உறவை வலியுறுத்துகின்றது,பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறே கூறுகின்றது மைத்திரி,கருணாவ என்ற சிங்கள சொற்களுக்கு பொருள் தெரியாத நிலையில் செயற்படும் பொதுபலசேனா போன்ற அதி தீவிர சிங.கள அமைப்புக்களின் பின்னணில் இருப்பவர்கள் யார் ?....
Post a Comment