அரபு வசந்தம் என்ற போர்வையில் - அமைச்சர் அதாஉல்லா
(ஏ.ஜி.ஏ.கபூர்)
தலைவர்கள் அரசியலுக்காக இனக் குரோதத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிடக் கூடாது என அமைச்சர் அதாஉல்லா தெரிவித்தார்.
உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சின் 15 மில்லியன் ருபா செலவில் அமைக்கப்பட்ட அக்கரைப்பற்று பிரதேச சபைக்கான புதிய கட்டிடத் திறப்பு விழாநேற்று; (28.03.2014) வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்றபோது அதில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு கட்டிடத்தை திறந்து வைத்தபின் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். அக்கரைப்பற்று பிரதேச சபைத் தவிசாளர் எம்.ஏ.றாஸீக் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வட கிழக்கில் முன்றிலொரு பங்கு முஸ்லிம்களும் வட கிழக்குக்கு வெளியே முன்றில் இரண்டு பங்கு முஸ்லிம்களும் வாழ்கின்றனர். மக்களை உணர்ச்சி வசப்படுத்தி அரசியல் பேசுபவர்கள் இதனை கருத்தில் கொள்ளாமல் தேர்தல் காலத்தில் மக்களின் வாக்குகளைப் பெற வீர வசனம் பேசுபவர்கள், தேர்தல் முடிந்ததும் வாலைச் சுருட்டிக் கொண்டு அமைதியாகிவிடுவார்கள். ஆனால் நாங்கள் உண்மையே பேசி மக்களிடம் யதார்த்தைக் கூறி மக்களை ஒற்றுமைப்படுத்தி வருகின்றோம்.
முன்று தசாப்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன்றுதான் நிம்மதி பெருமுச்சு விடுகின்கின்றனர்;. எனவே முவின மக்களும் சேர்ந்தே நம் நாட்டை சாந்தமும் அமைதியும், சுபிட்சமும் கொண்ட கொண்ட நாடாக மாற்ற வேண்டும்; எனவும்
அரபு வசந்தம் என்ற போர்வையில் ஈராக், லிபியா, சிரியா முதலிய நாடுகளின் எண்ணை வளத்தை சூரையாடுவதற்காக அந் நாடுகளை நாசப்படுத்தியவர்கள் எமது நாட்டில் மனித உரிமை மீறப்படுகிறது.மனித நேயமில்லை எனக் கூறி ஜெனீவாவில் நாடகமாடுவது மனிதாபிமானத்திற்காக அல்ல. இலங்கையையும் தமது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருவதற்கே.
ஒரு காலத்தில் பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தின் இந்த இடம் ஒரு குளமாக இருந்தது. இந்த இடத்தை அபிவிருத்தி செய்வதற்காகக் கேட்டபோது தர மறுத்தர்hகள். இந்த இடத்தை பொது மக்கள் பிடித்த போது மிகக் கஷ்டப்பட்டு பாதுகாத்தோம். இன்று இன்னும் பலவருடங்களுக்குப் பின்னர் கிடைக்க வேண்டிய இந்தப் பிரதேச சபை இறைவன் உதவியால் இன்று கிடைத்துள்ளது. இதனால் இந்தப் பிரதேசம் அபிவிருத்தியடைந்து வருகின்றது. அக்கரைப்பற்று நகரமும் பிரதேச சபை பிரதேசமும் வேறு வேறல்ல. முன்னர் மின்சாரம், குடி நீர், வீதி அபிவிருத்தி என வருகின்றபோது முன்னர் அக்கரைப்பற்றின் முதலாம் குறிச்சி, ஆறாங் குறிச்சி, மத்திய பிரதேசம் என அபிபவிருத்தி செய்த பின்னர்தான் இங்கு வரவேண்டும் ஆனால் இன்று அக்கரைப்பற்றுப் பிரதேச சபை பிரதேசம் முதன்மை அடிப்படையில் உங்களுக்களுக்கென ஒதுக்கப்படுகின்ற நிதியைக் கொண்டு அபிவிருத்தி செய்யக் கூடியதாகவுள்ளது.
நீங்களும், இந்தப் பிரதேசமும் இன்னும் அபிவிருத்தியடைய வேண்டும். நூலகம், வைத்தியசாலை என்று பல்வேறு அபிவுpருத்திகளோடு உங்களது வாழ்க்கைத ;தரமும் இன்னும் மேம்பட வேண்டும்.இன்று இந்தப் பிரதேசம் நிர் வளம் உட்பட நன்கு அபிவிருத்திகண்டு வருகின்றது என்றும் மேலும் தெரிவித்தார்.
These guys are like jokers.
ReplyDeletecan you tell the public what the joke here please
ReplyDelete30 ஆண்டு கால யுத்தத்தின் பிந்திய கிட்டத்தட்ட 15 வருங்களாக இந்த மாலைக் கலாச்சாரம் தடைப்பட்டிருந்த்து, இப்போது மீண்டும் ஆரம்பித்துவிட்டார்கள். சேவை செய்தோ இல்லையோ! மாலைக்காக கூட்டம் போட்டுவிடுகிறார்கள் மாலைப் பிசாசுகள்.
ReplyDelete