Header Ads



நவநீதம்பிள்ளை வீசிய பந்துகளுக்கு ரவூப் ஹக்கீம் சிறந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார் - விமல் வீரவன்ச


வடக்கு மற்றும் கிழக்கு மாணங்களில் ஐக்கிய நாடுகளின் தலைமையில் இடைக்கால நிர்வாகம் ஒன்றை ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், அமைச்சருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

மனித உரிமைகள் ஆணையாளர் வீசிய பந்துகளுக்கு அமைச்சர் ரவுப் ஹக்கீம் சிறந்த ஓட்டங்களைப் பெற்றுள்ளார்.

இதற்கிடையில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும் அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றுடன் இணைந்து, சமயப் பிரச்சினையை எழுப்பியுள்ளார்.

இந்த விடயங்களே ஜெனீவா மாநாட்டில் இலங்கைக்கு எதிரான நிலைப்பாடு அதிகரிக்கச் செய்தது.

இதேவேளை எதிர்காலத்தில் தமக்கு சாதகமான சமயம் ஒன்றை பார்த்து, அமைச்சர் ரவுப் ஹக்கீம் அரசாங்கத்தில் இருந்து விலகி, தமிழ் தேசிய கூட்டமைப்புடன் இணைவார்.

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு மேற்குலக நாடுகளின் ஆதரவை பெற்று, இலங்கைக்கு எதிரான நிலைப்பாட்டை வலியுறுத்தி வருகிறது.

இந்த நிலையில் அமைச்சர் ஹக்கீமும், தமிழ் தேசிய கூட்டமைப்பும் இணைந்து, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கால நிர்வாகத்தை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகளிடம் கோரிக்கைவிடுப்பார்கள்.

அதன்அடிப்படையில் அங்கு இடைக்கால நிர்வாகம் ஏற்படுத்தப்படும் என்று அமைச்சர் விமல்வீரவன்ச தெரிவித்துள்ளார்.

2 comments:

Powered by Blogger.