வக்ஃப் நிலத்தில் கனவு இல்லம் கட்டிய, இந்தியாவின் முதற்தர பணக்காரன்
வக்ஃப் நிலத்தில் கனவு இல்லம் கட்டியதாக பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீது விசாரணை வேண்டி முஸ்லிமே ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு கரீம்பாய் இப்ராஹீம் கோஜா என்ற அநாதை நிலையத்திற்கு சொந்தமான நிலம் 21 கோடி ரூபாய்க்கு அம்பானிக்கு சொந்தமான ஆண்டிலியா கமர்சியல் ப்ரைவட் லிமிடடிற்கு அவர்கள் விற்றுள்ளனர். நிலத்தின் அன்றைய சந்தை மதிப்பு 105 கோடி ரூபாய் ஆகும்.
அப்போது அப்போதைய மஹராஷ்ட்ரா வக்ஃப் துறை அமைச்சர் நவாப் மாலிக் இந்த விற்பனையை எதிர்த்தார்.இதனைத்தொடர்ந்து இந்நிலத்தை விற்பனைச் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது.
மேலும் கடந்த 2003-ஆம் ஆண்டு வக்ஃபு போர்ட் இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இதற்கிடையே வக்ஃபு போர்டு அம்பானியிடம் 16 லட்சரூபாய் பெற்றுக்கொண்டு புகாரை வாபஸ் பெற்றுள்ளது.
இதனை அடுத்து வக்ஃபு போர்டு சொத்து அபகரிப்பில் தொடர்புடைய முகேஷ் அம்பானி, மற்றும் அரசு அதிகாரிகள் அப்போதைய வக்ஃபு அமைச்சர்கள் ஆகியோரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முஸ்லிமே ஹிந்த் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது. INe
Post a Comment