பாகிஸ்தானில் நீதிமன்ற வளாகத்தில் தற்கொலை தாக்குதல்
பாகிஸ்தானில் கோர்ட் வளாகத்தில் புகுந்து இன்று 03-02-2014 கொடூர தாக்குதல் நடத்தினர். இதில் வக்கீல்கள், கோர்ட்டுக்கு வந்தவர்கள், நீதிபதி என 11 பேர் உயிரிழந்தனர். 30 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர்.
இன்று வழக்கம் போல் மாவட்ட செஷன்ஸ் கோர்ட் செயல்பட்டு கொண்டிருந்தது. இந்நேரத்தில் ஒரு மனித வெடிகுண்டு வெடித்தது. தொடர்ந்து கோர்ட்டுக்குள் புகுந்த துப்பாக்கியால் சுட்டனர். கையெறி குண்டுகள் வீசப்பட்டது. இதில் கோர்ட்டில் இருந்த 11 பேர் சம்பவ இடத்தில் இறந்தனர். இதில் ஒருவர் செஷன்ஸ் நீதிபதியும் அடங்குவார். இதனையடுத்து இங்கு பெரும் பதட்டம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து 12 நிமிடங்கள் இந்த அதிரடி தாக்குதல் நடந்தது. இதனையடுத்து சம்பவ பகுதிக்கு சிறப்பு கமாண்டோ படையினர் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலில் ஈடுபட்டவர்கள் துப்பாக்கியுடன் தப்பி ஓடி விட்டனர். இந்த அமைப்பினர் எந்த இயக்கத்தை சேர்ந்தவர்கள் என இன்னும் தெரியவில்லை. முன்னாள் பாதுகாப்பு செயலர், தலாத் மசூத் கூறுகையில், இது துரதிருஷ்டவசமானது. இது தொடர்பாக கடும் நடவடிக்கைகள் எடுத்து சட்டத்திற்கு முன் நிறுத்த வேண்டும், என்றார்.
Post a Comment