Header Ads



கொழும்பிலுள்ள அமெரிக்க தூதரகம் பலப்படுத்தப்படுகிறது

அமெரிக்காவுக்கு எதிரான போராட்டங்கள் இந்தவாரம் தீவிரமடையலாம் என்பதால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகம் தேவையான பாதுகாப்பு முன்னேற்பாடுகளை மேற்கொண்டுள்ளது. 

ஐ.நா மனிதஉரிமைகள் பேரவையில் அமெரிக்கா தலைமையிலான நாடுகளால் முன்வைக்கப்பட்டுள்ள சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானம் இந்தவாரம் வாக்கெடுப்புக்கு விடப்படவுள்ளது. 

இதனால், கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதுரகத்துக்கு முன்பாக, எதிர்ப்புப் போராட்டங்கள் தீவிரமடையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

இந்தநிலையில், இந்தவாரம் சிறப்புப் பாதுகாப்புக் கோரப்பட்டுள்ளதா என்று அமெரிக்கத் தூதரக ஊடக தகவல் அதிகாரி ஜுலியானா ஸ்பவனிடம் கேட்ட போது, “பாதுகாப்புக்குத் தேவையான நடவடிக்கைகள் தூதரகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் சிறிலங்கா காவல்துறை ஒத்துழைப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

தூதரகப் பாதுகாப்புக்கு சிறிலங்கா காவல்துறையின் உதவி நாடப்படுவது வழக்கமான நடைமுறையே என்றும், அவர் கூறியுள்ளார். 

கடந்தவாரம் அமெரிக்காவுக்கு எதிரான மூன்று போராட்டங்கள் கொழும்பில் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

1 comment:

  1. எத்தனை போராட்டங்கள் நடந்தாலும் நடக்கவேண்டிய ஐ.நா.பேரவையின் செயட்பாடுகள் நடந்தே ஆகும்,உங்களின் போராட்டங்கள் எவ்வளவுக்கு நடக்கிறதோ,அந்தளவுக்கு இலங்கைக்கு எதிரான தீர்மானங்களும் அதிகரிக்கும்.

    இலங்கைக்கு எதிராக தீர்மானத்தை ஆரம்பத்தில் வலுவடைய செய்தவரே பெருமைக்குறிய முட்டால் விமல்வீரவன்ச ஆவார்.இதனை அமெரிக தூதரரகம் அறிவித்தது.

    முட்டால்களும் சுயனலவாதிகளும்தான் இப்படி செய்கிறார்கள் என்றால்,இலங்கை தௌகீத் ஜமாத்தினரும் எதிர்ப்பு ஆர்ப்பாட்டதை செய்ய இருக்கிரார்களே இதற்கும் இஸ்லாத்திற்கும் என்ன சம்பந்தம் என்பதை அவர்கள் மிக தெளிவாக விளங்கப்படுத்த வேண்டும்.

    பள்ளிவாயல்கள் உடைக்கப்படும்போதும்,ஹலால் சான்றிதழ் பிரச்சினகள்,மற்றும் முஸ்லிம் மாணவியர்களுக்கு பாடசாலைகளில் நடந்த மானக்கேடான காரியங்கள் இப்படி ஆயிரம் நடந்ததே,அப்போது இந்த புத்திஜீவிகள்,SLTJ எங்கே போய்விட்டார்கள்?

    எங்களுக்கு தெறியாத அளவுக்கு உங்களிடத்தில் ஏதும் கு-ஆன்,ஹதீஸ் இந்த ஆர்ப்பாட்ட பேரணிக்கு ஆதரவாக இருக்கலாம்,அப்படி இருந்தால் எங்கே விளங்கப்படுத்துங்கள் பார்க்கலாம்.

    இஸ்லாத்திற்கும் இந்த எதிர்ப்பு போராட்டதிற்கும் என்ன தொடெர்பு என்பதையே நீங்கள் விளங்கப்படுத்த வேண்டும்.

    இல்லையேல்,நீங்களும் பணத்திற்காக இயங்கும் சில்லறைகள் என்றும்,TNTJ இன் அசல் COPY,PASTE என்பதையும் மேலும் நீங்களே நிருபிப்பீர்கள்.

    ReplyDelete

Powered by Blogger.