Header Ads



முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டும் - முஸ்லிம் கவுன்ஸில்

எதிர்வரும் 29 ஆம் திகதி நடைபெறவுள்ள மேல், தென் மாகாண சபைகளுக்கான தேர்தல்களின் போது முஸ்லிம்கள் தமது வாக்குரிமையை முழுமையாகப் பயன்படுத்த வேண்டுமென முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பான முஸ்லிம் கவுன்ஸில் ஒப் ஸ்ரீலங்கா கோரிக்கை விடுத்துள்ளது.

அரசாங்கத் தீர்மானங்களை எடுப்பதில் ஒரு தனிநபருக்குச் செல்வாக்குச் செலுத்தக் கூடிய முக்கியமான வழிமுறை வாக்களிப்பாகும். மக்கள் அரசாங்க நடவடிக்கைகளில் பங்குபற்றக் கிடைக்கும் ஒரே சந்தர்ப்பம் வாக்களிப்பு முறையாகும். 

வாக்களிப்பது அடிப்படை மனித உரிமையாகக் கருதப்படுகின்றது. இந்த வாய்ப்பினை எமது சமூகத்தைச் சேர்ந்த அநேகர் பயன்படுத்தாது இருக்கின்றனர். சனிக்கிழமை நடைபெறவுள்ள தென், மேல் மாகாண சபைத் தேர்தல் குறித்து, இதற்கு முன் தேர்தல்களில் காட்டிய ஆர்வம் முஸ்லிம் சமூகத்தினரிடம் குறைந்திருந்ததனை அவதானிக்கக் கூடியதாக இருந்தது. 

எனவே, முஸ்லிம் கவுன்ஸில் இந்த மாகாணங்களிலிலுள்ள முஸ்லிம்களை தமது வாக்குகளை செலுத்தி, தாம் விரும்பும் கட்சிக்கோ அல்லது குழுக்களுக்கோ, அபேட்சகர்களை முன்நிறுத்தி தனது வாக்கு உரிமைகளைப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறோம்.

நாம் எமது வாக்குகளைப் பயன்படுத்தி விரும்பிய உறுப்பினர்களை தெரிவு செய்வதன் மூலம் உரிய இடங்களில் எமது பிரச்சினைகளை எழுப்பி தீர்வுகளைப் பெற்றுக் கொள்ள உதவும் என்றும் முஸ்லிம் கவுன்ஸில் தலைவர் என்.எம். அமீன் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

2 comments:

  1. ஆம் நாம் எமது வாக்குரிமையை பாவிக்காது விடுவதும் ஒருவகையில் உரிமை துஸ்பிரயோகமாகும்

    ReplyDelete
  2. அன்பின் இஸ்லாமிய சஹோதர சஹோதரிகளே ,
    எவ்வாறு வாக்குரிமையை பாவிப்பது முக்கியமகிறதோ அதேபோன்று அந்த பெறுபேற்றின் மூலம் எமது உரிமைகள் பாதுகாப்பு சுதந்திரம் போன்றவைகள் உருதியாக்கப்படல் வேண்டும். எனவேதான் இவற்றை கருத்திற்கொண்டு நாம் நமது வாக்குகளை அளிக்க வேண்டும். குறிப்பாக இன்றைய சூழலை சீர்தூக்கி பார்க்க வேண்டியது ஒவ்வொரு வாக்குரிமை பெற்ற முஸ்லிமின் கடமையாகும். சிறுசிறு தனிப்பட்ட தேவைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் அப்பால் நின்று எமது, எமதுசந்ததிகளுக்கான உரிமைக்காகவும் ஒரு நிலையான சமாதான சூழலை உருவாக்கவும் நல்ல எண்ணத்தோடு உங்களின் வாக்குகளை அளிக்குமாறு முஸ்லிம் சமுகம் சார்பாக வேண்டிக்கொள்கிறேன். ஆமீன்.

    முஸ்லிம் கவுன்சில் இற்கு எனது நன்றிகள்.

    ReplyDelete

Powered by Blogger.