Header Ads



வாத்துக் கூட்டத்துடன் மோதிய மலேசியா ஏர்லைன்ஸ் விமானம்

நேபாள விமான நிலையத்தில் தரையிறங்கியபோது மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாத்துகள் மீது மோதியது. இதில் விமானத்தின் கண்ணாடி உடைந்துள்ளது. 

ஆனால் இப்படி ஒரு சம்பவமே நடக்கவில்லை என்பது போன்று நேபாள அதிகாரிகள் அமைதியாக இருந்துள்ளது அதிர்ச்சியை அளித்துள்ளது. 

ஏற்கனவே ஒரு மலேசிய விமானம் காணாமல் போய் பல நாட்களாகி, உலக நாடுகள் பலவும் ஒன்று கூடி கடல் கடலாக அலசி ஆராய்ந்து வரும் நிலையில் இன்னொரு மலேசிய விமானம் அபாயகரமான விபத்திலிருந்து தப்பியுள்ளது அனைவரையும் அதிர வைத்துள்ளது.

180 பயணிகள் மற்றும் சிப்பந்திகளுடன் மலேசியாவில் இருந்து கிளம்பிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 114 கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு நேபாள தலைநகரான காத்மாண்டுவில் உள்ள திரிபுவன் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது. அப்போது வாத்துக் கூட்டம் ஒன்று திடீரென குறுக்கே புகுந்துள்ளது. அவை விமானத்தின் வின்ட்'Pல்டில் மோதியது. இதனால் விமானம் தரையிறங்கியபோது அதன் கண்ணாடிகள் உடைந்து ஓடுதளத்தில் சிதறின. 

இந்த விபத்தில் யாரும் காயம் அடையவில்லை. இருப்பினும் விமான சிப்பந்திகள் இது குறித்து விமான போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுக்கவில்லை. மேலும் விமானிகளும் கூட தகவல் தராமல் அமைதியாக இருந்து விட்டனர். இந்த சம்பவம் குறித்து nஜட் ஏர்வேஸ் சிப்பந்திகள் அதிகாரிகளிடம் தெரிவித்த பிறகே மலேசிய விமானத்தின் தலைவர் விபத்து நடந்ததை உறுதி செய்தார். 

இதையடுத்து ஓடுதளத்தில் சோதனையிட்டபோது 10 வாத்துக்கள் இறந்து கிடந்ததும், கண்ணாடி துண்டுகள் கிடந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது. அவை ஓடுதளத்தில் இருந்து அப்புறப்படுத்தப்பட்டன. இதையடுத்து கோலாலம்பு+ருக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு கிளம்ப வேண்டிய விமானம் சீர்செய்யப்பட்ட பின்னரே அதிகாலை 3.30 மணிக்கு கிளம்பியது.

No comments

Powered by Blogger.