ஆண்கள் பற்றிய விமர்சனங்கள்..!
பாரிஸ் ஏங்க குழந்தை அழுகிறது.. கொஞ்சம் தூக்கி வைக்க கூடாதா, ஏங்க கேஸ் ஸ்டவ்வை கொஞ்சம் ஆப் பண்ணுங்க... வீட்டில் வேறு வேலையாக இருக்கும் பெண்கள் கூறுவார். ஆனால், கணவரோ, தந்தையோ, சகோதரனோ கால் மேல் கால் போட்டு கொண்டு டிவி பார்த்து கொண்டிருப்பார்கள். அல்லது பேப்பர் படித்துக் கொண்டிருப்பார்கள். வீட்டு வேலைகளில் பங்கெடுத்து கொள்ள மாட்டார்கள். வீட்டு வேலை செய்வதில் உலகிலேயே இந்திய ஆண்கள்தான் மிக மோசம் என்று கருத்து கணிப்பில் தெரிய வந்துள்ளது.
பிரான்சை தலைமையிடமாக கொண்டு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு சர்வதேச நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் 34 நாடுகள் உறுப்பு நாடுகளாக உள்ளன. இந்நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ள விவரங்கள் வருமாறு வீட்டு வேலைகளில் பெண்களுக்கு உதவி செய்யும் ஆண்கள் பற்றி கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. இதில் இந்திய ஆண்கள் தினமும் சராசரியாக வெறும் 19 நிமிடங்கள் மட்டுமே வீட்டு வேலைகளுக்கு ஒதுக்குகின்றனர். உலகிலேயே வீட்டு வேலை செய்ய ஆண்கள் ஒதுக்கும் நேரத்தில் இந்திய ஆண்கள்தான் மிகமிக குறைவான நேரத்தை ஒதுக்குவது தெரிய வந்துள்ளது. இந்தியாவுக்கு அடுத்தபடியாக ஜப்பான் 24 நிமிடங்கள், கொரிய ஆண்கள் 21 நிமிடங்களை ஒதுக்குகின்றனர். இந்த விஷயத்தில் சீன ஆண்கள் 28 நிமிடங்கள் வீட்டு வேலை செய்கின்றனர்.
ஸ்லோவேனியா நாட்டு ஆண்கள்தான், வீட்டில் ஒரு நாளைக்கு சராசரியா 114 நிமிடங்கள் வேலை செய்கின்றனர். இதுதான் உலகிலேயே அதிகப்பட்சம். இதற்கடுத்து, டென்மார்க், எஸ்டோனியா நாட்டு ஆண்கள் உள்ளனர். இந்தியாவில் கணவன், மனைவி இருவருமே வேலைக்கு சென்று வந்தாலும், வீட்டு வேலைகளை பெரும்பாலும் மனைவிதான் செய்கிறார். இந்திய பெண்கள் சராசரியாக ஒரு நாளைக்கு 298 நிமிடங்கள் வீட்டு வேலை செய்கின்றனர். அதாவது 5 மணி நேரம் வேலை செய்கின்றனர். குழந்தைகளை கவனித்து கொள்ளுதல், சமையல், துணி துவைத்தால் வீட்டை சுத்தப்படுத்துதல், செல்ல பிராணிகளை பராமரித்தல் உள்பட எல்லா வேலைகளையும் பெண்களே பெரும்பாலும் செய்கின்றனர்.
டிவி பார்க்கவும், பொழுது போக்கவும் இந்திய பெண்கள் 221 நிமிடங்கள் 4 மணி நேரம் எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவில் ஆண்கள் ஒரு நாளைக்கு 11 மணி நேரம் தங்கள் சொந்த விஷயத்துக்காக செலவிடுகின்றனர். பெரும்பாலும் தூங்குவதற்கும், சாப்பிடுவதற்கும், தண்ணி அடிப்பதற்கும் நேரம் போகிறது. இது ஒரு கலாசார வழக்கமாகி விட்டது என்று சமூக ஆர்வலர் சந்தோஷ் தேசாய் கூறுகிறார்.
Post a Comment