இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகலவித எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளது - அஸ்வர்
இலங்கைக்கு எதிராக ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்த தீர்மானம் ஐக்கிய தேசியக் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் எம்.பி, ஏ.எச்.எம் அஸ்வர் நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார். கூட்டமைப்பும், ஐ.தே.க.வும் இலங்கைக்கு எதிராக முன்னெடுத்த சகல விதமான எத்தனங்களும் தோல்வியில் முடிந்துள்ளதால் இவர்கள் தொடர்பில் கவலையடைவதாக அவர் மேலும் தெரிவித்தார்
காலஞ்சென்ற முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் நவரட்ன மீதான அனுதாபப் பிரேரணை நேற்று பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது.
இதில் கலந்து கொண்டு உரையாற்றிய ஏ.எச்.எம். அஸ்வர் எம்.பி. மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் தீர்மானம் தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கும், கருணாநிதிக்கும் கவலையை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இலங்கைக்கு எதிராக அமெரிக்கா உட்பட ஏகாதிபத்திய சக்திகளோடு இணைந்து எதிர்க்கட்சியினர் பல சதி முயற்சிகளில் ஈடுபட்டாலும் ஜெனீவாவில் அமெரிக்கா கொண்டு வந்திருக்கும் பிரேரணையானது இவர்களின் எதிர்பார்ப்புகளை ஈடேறச் செய்யவில்லை.
என்னதான் இவர்கள் முயன்ற போதும் ஏமாற்றமே இவர்களுக்கு கிட்டியிருக்கிறது என்றும் மேலும் கிண்டலாகத் தெரிவித்தார்.
அஸ்வர் MP அவர்களே, நீங்க இதுக்கெல்லாம் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியாகனும். அத மறந்திடாதீங்க. ஒங்கட பதவி இந்த உலகத்ல மட்டும்தான். எத்தனை பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டாலும் மூடப்பட்டாலும் அத பத்தி பேச மாட்டீங்க. பேசுகின்றவர்களையும் நகைக்கிறீங்க. நீங்க எதுவுமே பேசாம வாய் பொத்தி இருந்தால் கூட அது சமூகத்துக்கு நன்மை பயக்கும்.உங்கள் நாவை பாதுகாத்துக் கொண்டால் மறுமையில் ஈடேற்றம் பெறுவீர்கள்.
ReplyDeleteஎன்ன அஸ்வர் சார்....!!!!!!!! உங்களின் 'புகழ்பாடும் அறிக்கைகளுக்கு' ஒரு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு எமது மக்களுக்காக உங்களின் 'திறமையை' வெளிப்படுத்துங்கள். அப்போது தெரியும் உங்களின் தலைவர் உங்களை 'எந்த இடத்தில்' வைத்திருக்கிறார் என்று. முடிந்தால் ஒரு சிறிய உதவி.... மூடப்பட்ட 28 பள்ளிவாசல்களில் ஒன்றையாவது மீண்டும் திறந்து வைக்க உங்களால் முடியுமா.....???? இதை ஒரு சவாலாக எடுத்து செய்து காட்டுங்கள்.... அப்போது எமது சமூகம் 'சிகப்பு தொப்பி அணிந்த' சிறந்த முஸ்லீம் தலைவர் என்று உங்களை பாராட்டுவதோடு மட்டுமல்லாமல் நன்றியுடையவர்களாகவும் இருப்பார்கள்.
ReplyDeleteசரியாகச்சொன்னீர்கள் அஸ்வர் எம் பி அவர்களே.தொடர்ந்து உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்.போகப்போக உணர்வார்களா என்று பார்ப்போம்.
ReplyDelete