Header Ads



இனவாத அரசியல்வாதிகளை நிராகரியுங்கள் - ஹிருனிகா அழைப்பு

இனவாத அடிப்படையில் செயற்படும் அரசியலவாதிகளை நிராகரிக்க வேண்டுமென மேல் மாகாணசபைத் தேர்தல் ஆளும் கட்சியின் சார்பில் போட்டியிடும் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்டத்தில் இனவாத அல்லது அடிப்படைவாத அரசியலில் ஈடுபடுவோர் வெற்றியீட்ட அனுமதிக்க மாட்டோம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தேர்தல் பிரச்சாரக் கூட்டமொன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இனவாத அரசியல்வாதிகள் தலைதூக்கினால் கொழும்பு மாவட்டத்தில் தமிழ் முஸ்லிம் மக்கள் வாழ முடியாத சூழ்நிலை உருவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அனைவருக்கும் அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், இன்னும் சில  நாட்களில் அநீதிகளுக்கு தீர்வு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜாதிக ஹெல உறுமய மற்றும் ஜே.என்.பி. போன்ற கட்சிகளின் வேட்பாளர்கள் ஹிரூனிகாவுடன் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது. gtn

No comments

Powered by Blogger.