Header Ads



உறைந்து விட்ட நயகராவும், உறங்கி விட்ட ஜெனிவாவும்

(றிசானா பசீர்)

அமெரிக்கா, ஜெனிவாவில் இலங்கையை குப்புறக்கவிழ்க்கும் என்று எண்ணிய ஊடகவியலாளர்கள், அரசியல் அவதானிகள், அமைச்சரவை மந்திரிகள், புத்தி ஜீவிகள், கல்வி மான்கள் அனைவரதும் கருத்து தவிடுபொடி. இவர்கள் அனைவரும் ஒரு விடயத்தை மறந்து விட்டார்கள். அதுதான் அமெரிக்காவின்  எதிர்பார்ப்பான “ இலங்கையில் அமெரிக்க விண்வெளி ஓட மையம் ”.  உலகில் காற்றாலும் காலநிலையாலும் பாதிக்கப்படாத ஓர் விண்வெளி ஓடம் அமைத்து ஏவத்தக்க இடமாக இலங்கை உள்ளது என்ற சமிக்கையை அமெரிக்கா வெளிப்படையாகக் கூறிச்சென்றது. இதுதான் அமெரிக்காவின் பின்வாங்கலுக்கான பிரதான காரணியாய் இருக்க வேண்டும். அது விண்வெளி மையம் என ஜாடையாகக் குறிப்பிடினும் உண்மையில் அதன் பேராசையும் பேராவாவும் இலங்கை மீதான இராணுவத்தளமே.

ஜெனிவாவில் அமெரிக்கா ஆனையைப் போன்று இலங்கையைத் துாக்கியடிக்கும் என்ற தமிழர்களுடைய அபிலாசையும் கற்பனையும் கனவும் எதிர்பார்ப்பும் எதிர்வு கூறலும் பகல் கனவாகி விட்டது. கண்களில் மண்ணைத்துாவி விட்டது போலாகிவிட்டது.

அமெரிக்காவுக்கு இலங்கைத் தழிழரின் பிரச்சினை ஒர் பெரிய விடயமல்ல என்பதே இதன் வெளிப்படை உண்மை. அமெரிக்கா கத்தியைத் தீட்டுகின்றது என்று எல்லோரும் நினைக்க அது புத்தியைத் தீட்டிக்கொண்டது.

அமெரிக்கா, இலங்கையின் கழுத்தை நெரிப்பதும்  விடுவதுமாக இருந்தது. படுகுழி தோண்டுவதும் மூடுவதுமாக இருந்தது. நாள் ஒன்று குறைந்தாலும் அமெரிக்காவிலிருந்து அதிகாரிகள் வருவது குறையாமலிருந்தது. ஐ.நா.ஆணையாளரில் தொடங்கி அத்தனை பேரும் வடக்கிற்கு சென்று அங்குள்ள அவலநிலையை நேரில் கண்டனா். ஜெனீவாவில் சமர்ப்பிக்கப்பட்ட நகல் தீர்மானத்தில் சர்வதேச விசாரணை என ஒரு விடயமே கோரப்படவில்லையாம், சர்வதேச போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் எதுவுமே பிரஸ்தாபிக்கப் பட்டிருக்கவில்லையாம். மாறாக பழைய குருடி கதவைத்திறடி என்பது போன்று மீண்டும் உள்ளக விசாரணையாம். 

  எப்படி இருந்த அமெரிக்காவை இப்படி வீழ்த்தியதே இலங்கை? என்பதுதான் புரியாத புதிர். இதில் ஏதாவது ராஜ தந்திரம் பிரயோகிக்கப் பட்டதா? என்பது மறுபக்க வினா..

    இது ஐ.தே.கட்சி, தமிழ்த்தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த பெரும் ஏமாற்றமாகும். கூட்டுப் படுதோல்வியாகும்.

            எது எவ்வாறெனினும், மூன்றாவது ஜெனீவா பிரேரணையும் கைநழுவியதால், இனி ஜெனீவாவை நம்பி இருப்பது முட்டாள்தனமானது என்பதை தமிழ் தேசியக்கூட்டமைப்பும் புலம்பெயர் தமிழர்களும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பிரபாகரனால் சாதிக்கமுடியாததை முதலமைச்சர் விக்னேஸ்வரன் சாதித்துக் காட்டுவாரா? என்ற ஐயப்பாடு என்னுள் எப்போதே எழுந்தது. விக்னேஸ்வரன் அரசியலுக்கு இறங்கி இருக்கக்கூடாது. வெற்றுப் பாத்திரத்தை வைத்துக்கொண்டு பிச்சை எடுக்கும் பிச்சைக்காரன் போலாகி விட்டார். கௌரவத்தை தக்க வைத்துக்கொள்ள தெரியாத சிறிய மனிதன் போலாகி விட்டாரே. 

இருந்த போதிலும் நம்பிக்கையை தளர விடாது அடுத்த ஜெனிவாவை நோக்கி நம்பிக்கையுடன் புலம்பெயர் பத்திஜீவிகள் செயற்படுவதை காணக் கூடியதாக உள்ளது.  ” கைக்கெட்டும் துாரத்தில் வெற்றி இல்லை. அதைவிட்டு விடும் எண்ணத்தில் நானுமில்லை“. என்பது தான் தமிழர்கள் பிடிவாதம். வாழ்க தமிழ் மக்கள் ! வளர்க தமிழ் ஈழம்!!  
[  நயகரா=அமெரிக்கா  ]

2 comments:

  1. நன்றி றிஸானா பஸீர்.ஏமாற்றப்பட்ட சமூகம் அமெரிக்காவுக்கெதிராக ஏதும் ஆர்ப்பாட்டம் செய்து தங்களது கோபத்தை வெளிக்காட்டினால் நல்லதாய் தோன்றுகிறது,என்ன செய்யலாமா இல்லையா?பேரினவாதிகள் பயப்பட்டு இருந்ததே இந்தவொரு ஜெனீவாவுக்குத்தான்,இப்போ அதுவுமில்லை என்றால் அவர்களின் ஆட்டம் நிச்சயம் இன்னுமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

    ஏனைய சகோதரர்களின் ஆக்கபூர்வமான பின்னூட்டலை எதிர்ப்பார்க்கிறோம் இங்கு.

    ReplyDelete
  2. ஐநாவை நம்பி, சந்தியில் நின்றுகொண்டு அரசுக்கு மார்ச் மாதம் வரைக்கும் என்று சவால் விட்ட நம்ம தொர அசாத் சாலி எங்கே???? அவரின் போலி பத்திரிகை மகாநாடு எங்கே?

    ReplyDelete

Powered by Blogger.