சர்வதேச நாடுகளின் அரசியல் தேவைக்காக இலங்கை பந்தாடப்படுகிறது - ஜீ.எல்.பீரிஷ்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளைக்கும், வெளிவிவகார அமைச்சர் g.l பீரிஸுக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று நேற்று இடம்பெற்றுள்ளது.
ஜெனீவா மனித உரிமைகள் மாநாட்டுக்கு சமாந்தரமாக இந்த சந்திப்பு இடம்பெற்றிருக்கிறது.
இதன் போது மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம் பிள்ளையால் இலங்கை தொடர்பில் முன்வைக்கவுள்ள அறிக்கை குறித்து கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கைக்கான தகவல்களை நவநீதம்பிள்ளை திரட்டிய விதம் மற்றும் அந்த தகவல்களை வழங்கிய தரப்பினர் தொடர்பில் அமைச்சர் ஜீ.எல்.பீரிஷ் கண்டனம் தெரிவித்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதேவேளை ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் நவநீதம்பிள்ளையின் இலங்கை தொடர்பான அறிக்கையால், இலங்கைக்கு எதிரான தரப்பினர் பலமடைந்திருப்பதாகவும், இதனால் இலங்கையின் மறுசீரமைப்பு நடவடிக்களை நெருக்கடிக்கு உள்ளாக்கி இருப்பதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சர்வதேச நாடுகள் தங்களின் அரசியல் தேவைக்காக இலங்கையை பந்தாடுவதாகவும் அவர் இதன் போது தெரிவித்திருப்பதாக, ஜெனீவாவில் உள்ள இலங்கையின் தூதரகத்தின் அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment