லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலய சுற்று மதில் உடைத்து அகற்றப்பட்டது.
(ஏ.பி.எம்.அஸ்ஹர்)
சாய்ந்தமருது லீடர் எம்.எச்.எம்.அஸ்றப் வித்தியாலயத்தின் பிரதான நுழைவாயிலுக்கு அண்மையிலிருந்த மின்மாற்றியின் பாதுகாப்பிற்காக கட்டப்பட்டிருந்த சுற்று மதில் அண்மையில் ( 1 ) உடைத்து அகற்றப்பட்டது.
இப் பாடசாலை சாய்ந்தமருது கோட்டத்தில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட ஆரம்ப பாடசாலையாகும். இப் பாடசாலை பிள்ளைநேயப் பாடசாலைக்குள்ளும் உள் வாங்கப்பட்டுள்ளது. இப் பாடசாலையில் கற்றல் கற்பித்தல் நடவடிக்கைகளும் புறக்கிருத்திய செயற்பாடுகளும் சிறப்பாக இடம்பெற்றுவரும் நிலையில் இப்பாடசாலையின் பிரதான நுழைவாயிலில் அமைந்துள்ள மின்மாற்றியினை சுற்றி பயங்கரவாதம் மிகவும் உச்ச நிலையில் இருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளினால் மின்மாற்றி தாக்கப்படலாம் என அச்சம் கொண்ட பிரதேச மக்கள் இலங்கை மின்சார சபையின் உதவியுடன் இதனை நிர்மாணித்திருந்தனர்.
இதனால் இப்பாடசாலைக்கு தினசரி வரும் ஆரமப்பிரிவு மாணவர்கள் இம் மின்மாற்றியின் அருகில் வரும் போது மிகவும் அச்சத்துடன் செயற்படுவதனை அவதானித்த இப் பாடசாலை அதிபர் எம்.ஐ.எம்.இல்யாஸ் கல்முனை பிராந்திய மின்சாரசபை பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹானின் கவனத்திற்கு கொண்டு வந்ததனைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டதுடன் பாடசாலையின் பின்புறமாவுள்ள நுழைவாயிலுக்கு அண்மையில் வீதி மின்விளக்கொன்றும் பொருத்தப்பட்டது.
இந்த நடவடிக்கையினை மிகவும் துரிதமாக மேற்கொண்ட இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் எம்.ஆர்.எம்.பர்ஹான் மற்றும் இலங்கை மின்சாரசபை ஊழியர்களுக்கும் அதிபர் , ஆசிரியர்கள் , மாணவர்கள் , பெற்றோர்கள் மற்றும் பிரதேசவாசிகள் நன்றிகளைத் தெரிவித்துள்ளனர்.
Post a Comment