Header Ads



சிரியா ராணுவ தளங்கள் மீது, இஸ்ரேல் விமானங்கள் தாக்குதல்

சிரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அந்த நாட்டின் 4 ராணுவத் தளங்களின் மீது இஸ்ரேல் புதன்கிழமை தாக்குதல் நடத்தியது. 40 ஆண்டுகளுக்குப் பின்னர் இரண்டு நாடுகளுக்கும் இடையே போர் மேகம் சூழ்ந்துள்ளது.

இஸ்ரேலின் எல்லையில் செவ்வாய்க்கிழமை சந்தேகத்திற்கிடமான செயல்கள் நடப்பதை அறிந்த அந்த நாட்டு ராணுவ வீரர்கள் அந்தப் பகுதிக்கு சென்று பார்வையிட்டனர். அப்போது சிரியாவில் இருந்து நடத்தப்பட்ட குண்டு வீச்சில் 4 இஸ்ரேல் ராணுவ வீரர்கள் காயமடைந்தனர். இதில், ஒருவர் பலத்த காயமடைந்தார்.

இந்த தாக்குதல் நடத்தப்பட்ட 12 மணி நேரங்களுக்குப் பின்னர் சிரியாவின் ராணுவ தளங்களைக் குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் ஜெட் விமானங்கள் மூலம் குண்டுவீசித் தாக்குதல் நடத்தியது.

""இஸ்ரேல் ராணுவ வீரர்கள் மீது செவ்வாய்கிழமை சிரியாவால் தூண்டப்பட்டு, உதவியளிக்கப்பட்டு வரும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதற்கு பதிலடியாக சிரியா நாட்டின் ராணுவத் தலைமையகம், பயிற்சி மையம் மற்றும் ஆயுதக் கிடங்குகள் உள்பட ராணுவ தளங்களின் மீது புதன்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது'' என்று இஸ்ரேல் ராணுவம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிரியாவில் அஸாத்தின் ஆட்சியைக் கவிழ்க்க கிளர்ச்சியாளர்கள் உள்நாட்டுப் போரில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை எதிர்த்துப் போரிட சிரியா நாட்டுப் படைக்கு லெபனானின் தெற்குப் பகுதியை ஆக்கிரமித்துள்ள ஹிஸ்புல்லா இயக்கத்தினர் ஆதரவு தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது. ஷியா முஸ்லிம்களின் ஆதரவைப் பெற்றுள்ள இந்த இயக்கம் 2006ஆம் ஆண்டில் இஸ்ரேலுடன் போரிட்டது.

ஆஸ்திரேலிய வீரர் பலி: சிரியாவில் நடந்த மோதலின்போது கொல்லப்பட்ட 22 வயதான கானெர் டிமெல் என்பவர், ஆஸ்திரேலியாவின் முன்னாள் ராணுவ வீரர் என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

No comments

Powered by Blogger.