மஹிந்த ராஜபக்ஸவை பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறார் ரணில் விக்கிரமசிங்க..!
ஐ.நா மனித உரிமை பேரவையில் இந்த வாரம் நிறைவேற்றப்படவுள்ள இலங்கைக்கு எதிரான பிரேரணை தொடர்பில், பகிரங்க விவாதத்துக்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு சவால் விடுத்துள்ளார்.
கிரிபத்கொடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டம் ஒன்றில் உரையாற்றிய அவர், இந்த விவாதம் சர்வதேச ரீதியாகவோ அல்லது உள்ளுர் மட்டத்திலான ஊடகங்களில் ஒளிபரப்பப்படலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை இலங்கைக்கு எதிரான பிரேரணை வாக்கெடுப்புக்கு வருகிறது. எனவே அதற்கு முன்னர் இந்த விவாதம் இடம்பெற வேண்டும் என்று ரணில் விக்கிரமசிங்க கோரியுள்ளார்.
இந்த விவாதம் நடத்தப்படுவதன் மூலம், இலங்கையின் பிரச்சினைக்கு ஒரு தீர்வு தொடர்பாக இணக்கத்தை பெற்றுக்கொள்ள முடியும் என்று எதிர்ப்பார்ப்பை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை தாமே தயாரித்த நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் நடைமுறைப்படுத்த தயங்குவது குறித்து ரணில் கேள்வி எழுப்பினார்.
ஜெனீவா பிரேரணை நிறைவேற்றம் காரணமாக இலங்கை அரசாங்கத்தை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கோ அல்லது இலங்கை மீது பொருளாதார தடையோ விதிக்க வாய்ப்பில்லை.
இந்தநிலையில் மாகாணசபை தேர்தலில் ஏன் மக்கள் ஐக்கிய நாடுகள் பிரேரணைக்கு எதிரான வாக்குகளாக கருதி தமக்கு வாக்குகளை அளிக்குமாறு அரசாங்கம் கோருகிறது என்று தமக்கு புரியவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.
இரண்டு நன்பர்களின் விவாதம் என்று அழைக்கலாம்.....??
ReplyDelete