ஜெனீவா தீர்மானத்தினால் நான் கலக்கமடைய போவதில்லை - ஜனாதிபதி மஹிந்த
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை தீர்மானத்தை நிராகரிப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை நிராகரிக்கின்றேன். தீர்மானத்திற்கு பதிலாக அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படும்.
இந்த தீர்மானம் நல்லிணக்கத்தை காயப்படுத்தும் வகையில் அமையும். இந்த தீர்மானம் நல்லிணக்கத்திற்கு வழியமைக்காது. எனினும், நான் இந்த தீர்மானத்தினால் களங்கப் போவதில்லை. ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க முயற்சிகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
Post a Comment