Header Ads



குறுந்திரைப்படப் போட்டி - முஸ்லிம் மாணவன் முதலிடம் பெற்று சுவீடன் செல்கிறார்


அகில இலங்கை ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக நடாத்தப்பட்ட குறுந்திரைப்பட போட்டியில் ,கொழும்பு ரோயல் கல்லூரி மாணவன் இனாஸ் இம்தியாஸ் சிறந்த குறுந்திரைப்படத்திற்கான முதற் பரிசையும், பார்வையாளர் தெரிவில் ஜனரஞ்சக படத்திற்கான பரிசையும் பெற்றுள்ளார்.

இலங்கை மதுபானம் மற்றும் போதைப் பொருள் தகவல் நிலையமும் சுவீடனைச் சேர்ந்த சர்வதேச IOGT-NTO  அமைப்பும் இணைந்து 5வது தடவையாகவும் அகில இலங்கை ரீதியில் போதைப் பொருள் பாவனைக்கு எதிராக குறுந்திரைப்பட போட்டி ஒன்றை நடாத்தியது. 

சுமார் 400 க்கு மேற்பட்டோர் கலந்து கொண்ட இப்போட்டியிலிருந்து தெரிவு செய்யப்பட்ட 25 பேரின் குறுந்திரைப்படங்கள் ஜூரிகளின் முன்னாலும், பார்வையாளர்கள் முன்னாலும் ஒளிபரப்பப்பட்டன. இப்போட்டியிலேயே இனாஸ் இம்தியாஸ் முதலாமிடத்தைப் பெற்றுள்ளார்.  

இப்போட்டியில் வெற்றி பெற்ற இனாஸ் இம்தியாஸுக்கு சுவீடன் நாட்டில் இரு வார காலம் சுற்றுலா செல்வதற்கு விமானப்பயணச்சீட்டும் வழங்கப்பட்டது.  

இனாஸ் இம்தியாஸ் அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணி சம்மேளனத்தின் தேசியத் தலைவர் தேசகீர்த்தி சட்டத்தரணி ரஷீத். எம்.இம்தியாஸ் - ரமீஸா இம்தியாஸ் தம்பதியரின் கனிஷ்ட  புதல்வராவார்.

No comments

Powered by Blogger.