அந்தப் பிரச்சினை இப்பொழுது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது - ஹசன் அலி
(Tm) வெள்ளிக்கிழமை (07) மாலை நடைபெற்ற ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உயர்மட்ட குழு கூட்டத்தில், நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெறுவது குறித்தே கலந்தாலோசித்தோம் என அக்கட்சியின் செயலாளர் ஹசன் அலி தெரிவித்தார்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நீதி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தலைமையிலான முகா உயர்மட்டக் குழுக் கூட்டம் நேற்று மாலை கொழும்பில் நடைபெற்றது. இதன்போது, மேல்மாகாண சபை தேர்தலில் வெற்றிபெறுவது குறித்து ஆலாசிக்கப்பட்டதுடன், ஒருங்கிணைப்பாளர்கள் நியமனமும் இடம்பெற்றது.
அரசாங்கத்திற்கும் முகாவுக்கும் இடையில் பிரச்சினைகள் உருவெடுத்திருப்பதாக சில அரசியல்வாதிகள் மட்டுமே பிரசாரம் செய்து வருகிறார்கள். எமது நிலைப்பாடு தொடர்பில் ஜனாதிபதிக்கு தெளிவாக நாங்கள் எடுத்துரைத்துள்ளோம். ஆகையினால், அந்தப் பிரச்சினை இப்பொழுது சுமுகமாக தீர்க்கப்பட்டுள்ளது. எனவே, இவ்விடயம் தொடர்பில் நாங்கள் உயர்மட்ட குழுக் கூட்டத்தில் கலந்தாலோசிக்கவில்லை எனவும் ஹசன் அலி மேலும் தெரிவித்தார்.
Post a Comment