Header Ads



கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் மன்சூரின் அடாவடித்தனம்

கிழக்கு மாகான சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் இன்று 31-03-2014 காலை சுமார் 10.30 மணியளவில் சம்மாந்துறை  அம்பாறை 14ம் வீதி உடன்கா இரண்டில் வைத்து இளைஞ்சர் ஒருவரை சராமரியாக தாக்கி உள்ளார்.

சம்மபவம் பற்றி தெரிய வருவதாவது,

இன்று  அம்பாறை 14ம் வீதி உடன்கா இரண்டில் இடம்பெற்ற நடமாடும் சேவையில் கலந்து கொண்டு திரும்புகையில் நடமாடும் சேவை நிலையத்திற்கு  சற்று தூரமாக கூடிக் கதைத்துக் கொண்டுநின்ற இளைஜர் கூட்டத்தில் இருந்த ரிபாயிஸ் வயது 22 எனும் இளைஞ்சரை தனது வாகனத்தில் இருந்து இரங்கி வந்த அமைச்சர் சராமரியாக தாக்கி உள்ளார்.

எதுவுமே செய்யாமல் எந்தக்காரணமும் இன்றி இவர் தாக்கப்பட்டதாக இவரது நண்பர்கள் தெரிவித்தனர். மேலும்  செய்வதறியாது  அவ்விடத்தில் நின்ற இளைஞ்சர்கள் தனது நண்பருக்காக அமைச்சர் மன்சூரிடம் என்னகாரனத்திர்காக இவருக்கு அடிக்கிறீர்கள் என வாதிட்டுள்ளனர் அப்போது அவர்கள் அனைவரையும் அசிங்கமான வார்த்தைப் பிரயோகங்களை பாவித்துவிட்டு  அவ்விடத்தில் இருந்து சென்றுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக தாக்குதலுக்கு உள்ளான ரிபாயிஸ் சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் தனது நண்பர்களின் உதவியுடன் சென்று புகார் செய்துள்ளதுடன் சிகிச்சைக்காக சம்மாந்துறை அன்வர் இஸ்மாயில் ஞாபகார்த்த ஆதார வைத்திய சாலையில் 6ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார்.

இவர் கடுமையான வேதனையில் அவதிப்படுவதுடன் முகமும் வீங்கிய நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். சம்பவம் தொடர்பாக சம்மாந்துறை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

4 comments:

  1. If its' proof its a Big Crime He must Punished. Hope will be good example for Other Ministers Who Miss Using The Power Mahinda Rajapaksa Government also one of the Reason.

    ReplyDelete
  2. இவர் என்ன BBS இன் சதோதர பிரவியோ.... !!! இதற்குத்தான் வோட்டுப்போட்டதற்கு 'கைமாறு செய்வது' என்பதா....? எது எப்படியோ இது விடயத்தில் முழு விபரம் தேவை.

    ReplyDelete
  3. This is a clear example of no law and order in SL. This criminal must be put in Jail.

    ReplyDelete
  4. aver appady than mansoor ithu onnum averukku poothusu alle

    ReplyDelete

Powered by Blogger.