நாவிதன்வெளி - மத்தியமுகாம் மக்களின் விசனம்
(எம்.எம்.ஜபீர்)
கடந்த மூன்று தசாப்தங்களுக்கு மேலாக யுத்ததினால் பாதிக்கப்பட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் வாழும் மூவின மக்களுக்குமிடையில் இன ஐக்கியத்தையும், புரிந்துணர்வையும் ஏற்பாடுத்தும் நோக்கில் யூ.எஸ்.எயிட் நிறுவனத்தினால் பல இலட்சம் ரூபாய் செலவில் மத்தியமுகாமில் கட்டிமுடிக்கப்பட்டு மக்கள் பாவனைக்காக கையளிக்கப்பட்ட வாரந்த சந்தைக் கட்டிடத் தொகுதி பாவனையின்றி கிடப்பதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
இக் கட்டிடத் தொகுதி பல வருடங்களாக இயங்காமலும், புற்கள் வளர்ந்து காடுகளால் மூடப்பட்டு காணப்படுகின்றமையால் இவ் பிரதேசத்திலுள்ள 7000 க்கும் மேற்பட்ட விவசாய உற்பத்தியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாவிதன்வெளி பிரதேசம் முற்றுமுழுதாக விவசாய பிரதேசமாக காணப்படுவதால் இப்பிரதேசத்தில் வாழ்கின்ற மக்கள் தமது விளை பொருட்களை விற்பனை செய்வதற்கு சந்தைக்கு செல்லுவதானால் 12 கீலோ மீற்றருக்கு அப்பால் உள்ள கல்முனை நகருக்கும், இல்லாவிடின் 23 கீலோ மீற்றரிற்கு அப்பாலுள்ள உகனைக்கும் செல்ல வேண்டியுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
சூரிய சக்தியில் இயங்கக்கூடிய மின் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தும் செயற்பாடில்லாது காணப்படுவதால் பிரதேசம் இருளில் மூழ்குவதுடன், பிரதேச மக்கள் இரவு வேளையில் அசௌகரியத்தை எதிர்நோக்கியும் வருகின்றனர். இதேவேளை பிரதேசம் இருள் சூழ்ந்து காணப்படுவதால் குற்றச் செயல்களும் இடம்பெறுவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இவ்வாராந்த சந்தையை செயற்படுத்துவதற்கு உரிய அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டு வாராந்த சந்தையை ஆரம்பிக்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கையும் விடுக்கின்றனர்.
Post a Comment