Header Ads



பெல்ஜியம் பத்திரிகையில் ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து கார்ட்டூன்

ஒபாமாவை மனித குரங்கு ஆக சித்தரித்து பெல்ஜியம் பத்திரிகையில் காட்டூன் வரையப்பட்டது.

தலைவர்கள் மற்றும் பிரபலங்களின் செயல்பாடுகளை கார்ட்டூன் படங்கள் மூலம் பத்திரிகைகள் விமர்சனம் செய்து வருகின்றன. அவை அவர்களின் மனதை புண்படுத்தும் வகையில் இருக்க கூடாது என்ற கருத்து உள்ளது.

ஆனால், பெல்ஜியத்தில் இருந்து வெளிவரும் உரு பத்திரிகை அமெரிக்க அதிபர் ஒபாமா அவரது மனைவி மிச்செலி ஆகியோரின் முகத்தை மனித குரங்குபோன்று வரைந்து பிரசுரித்தது.

அமெரிக்காவில் மரிஞ்சுனா என்ற போதை பொருள் விற்க ஒபாமா அனுமதி வழங்கியுள்ளார். அதை கேலி செய்யும் விதமாக இந்த கார்ட்டூன் வரையப்பட்டுள்ளது.

மேலும் இதை ரஷிய அதிபர் விளாடிமிர் புதின், ஒபாமாவுக்கு அனுப்பியதாக கேலி (ஜோக்) எழுதப்பட்டிருந்தது. இது வாசகர்கள் மனதை புண்படுத்தியது.

எனவே, டுவிட்டர் இணையதளத்தில் ஏராளமானவர்கள் அந்த பத்திரிகை மீது கண்டனம் தெரிவித்தனர். ஒபாமா மீது இன வெறியை தூண்டுவதாகவும் கூறியிருந்தனர். இதற்கிடையே அதிபர் ஒபாமா நாளை (1–ந்தேதி) பெல்ஜியம் வர இருக்கிறார்.

இந்த நிலையில் இக்கார்ட்டூன் பெல்ஜியம் அரசுக்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியது. அதை தொடர்ந்து அந்த பத்திரிகை தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்பு கோரியுள்ளது.

தங்களது கார்ட்டூன் இன வெறியை துண்டுவதற்காக வெளியிடப்படவில்லை கேலி செய்யும் விதத்தில் தான் இக்கார்ட்டூன் வரையப்பட்டது என்றும் விளக்கம் அளித்துள்ளது.

No comments

Powered by Blogger.