மனிதர்களால் ட்ரில்லியன் வாசனைகளை தரம் பிரிக்க முடியும்
மனிதர்களின் கண்பார்வை 10 லட்சத்துக்கு அதிகமான நிறங்களை தரம் பிரித்து அடையாளம் காண முடியும். காதுகளால் 3 லட்சத்து 40 ஆயிரம் வகை ஒலிகளை வேறுபடுத்தி அறிய முடியும். ஆனால், மூக்கினால் சுமார் 10 ஆயிரம் நறுமணங்களையே நுகர்ந்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்று மட்டுமே இதுவரையில் நம்பப்பட்டு வந்தது.
1920-ம் ஆண்டு வாக்கில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படியிலான இந்த நம்பிக்கையை பொய்யாக்கும் வகையில், மனிதர்களால் சுமார் ஒரு ட்ரில்லியன் (லட்சம் கோடி) வாசனைகளை தரம் பிரித்து நினைவில் வைத்துக் கொள்ள முடியும் என்பது தற்போது நிரூபிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் ராக்ஃபெல்லர் பல்கலைக்கழகத்தின் ஆய்வு கூடத்தில் 26 தன்னார்வலர்களிடம் 128 வாசனாதி பொருட்களின் கலவையுடன் கூடிய 264 நறுமண மாதிரிகளை முகர்ந்து, தரம் பிரித்து அடையாளம் காட்டும்படி நடத்தப்பட்ட சோதனையில் இந்த புதிய முடிவு வெளியாகியுள்ளது.
இந்த வாசனைகளை நினைவுபடுத்தி கூற யாரும் அதிக நேரத்தை எடுத்துக் கொள்ளாமல், வாசனைக்குரிய பொருளின் மூலப்பெயரை உடனுக்குடன் சரியாக கூறியதாக தெரியவந்துள்ளது.
Post a Comment