பொத்துவில் ஜய்க்கா கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு
(யு.எல்.எம். றியாஸ்)
பொத்துவில் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட ஜய்க்கா கிராமத்தின் குடிநீர் பிரச்சினைக்கு திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின் முயற்சியின் பயனாக தீர்வு காணப்பட்டுள்ளது.
கடந்தகாலங்களில் இக்கிராம மக்கள் நீரினைப்பெற பல்வேறு சிரமங்களை எதிர் கொண்டு வந்தனர். இதை கருத்தில் கொண்டு பொத்துவில் பிரதேச சபையும் தேசிய நீர்வளங்கள் வடிகாலமைப்பு சபையும் இணைந்து பவுசர் மூலம் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இது தொடர்பாக கிராமமக்களிடம் தெளிவு படுத்தும் கூட்டம் அண்மையில் ஜய்க்கா கிராமத்தின் சன சமூக நிலையத்தில் இடம்பெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். இந்நிகழ்வில் பொத்துவில் பிரதேச சபை தவிசாளர்,பிரதேச செயலாளர் ,மற்றும் கிராம மக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
Post a Comment