சிரியாவில் கடத்தப்பட்ட இரு ஸ்பெயின் ஊடகவியலாளர்கள் விடுதலை
சிரியாவில் வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னாள் கடத்தப்பட்ட இரு ஸ்பெயின் ஊடகவியலாளர்கள் விடுதலை
இஸ்லாமிய போராளிகளால் சிரியாவில்வைத்து ஆறு மாதங்களுக்கு முன்னாள் கடத்தப்பட்ட இரு ஸ்பெயின் ஊடகவியலாளர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுடன் கடத்திச் செல்லப்பட்ட புகைப்பட்ட பிடிப்பாளரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக ஸ்பெயின் செய்திதாள்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விடுவிக்கப்பட்டவர்கள் துருக்கிய படைப்பிரிவினரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்தி நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், விடுவிக்கப்பட்டவர்கள் இன்று மெட்ரீட்டுக்கு அனுப்பி வைப்பப்படுவர் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
Post a Comment