Header Ads



விமானியின் மகள் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம்..!

(முத்துப்பேட்டை)

கோலாலம்பூர்: மாயமான மலேசிய விமானத்தின் விமானியின்  மகள் எழுதியிருக்கும் உருக்கமான கடிதம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. அவருடைய கடிதத்தில் நுயிர் நாடியா அப்த் ரகீம் என்ற அந்த பெண் தன்னுடைய அன்பையும், தன் தந்தையின் மீதான நம்பிக்கையையும் வெளியிட்டுள்ளார். தன்னுடைய கோலாலம்பூர்-பெய்ஜிங் பயணத்தின் போது அது தொலைந்து போனது.239 பயணிகளுடன் கூடிய அந்த விமானத்தை தேடும் பணி இன்னும் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. விமானியின் தற்கொலை?: புலனாய்வு துறையினர் விமானியின் தற்கொலைதான் இதற்கான முக்கிய காரணமாக இருக்க முடியும் என தீர்மானித்தனர்.

மாயமான விமானத்தின் தலைமை விமானி ஷாகிரி அகமத் ஷா,நாதியாவின் தந்தையின் நண்பர்.உருக்கமான கடிதம்: 

“பறக்கும் சாரதி” இந்த குறிப்பானது பல நாட்களுக்கு முன் நான் எழுதிய ஒன்று என் தந்தையை நான் எவ்வளவு உயர்வாகவும், அவருடைய பணியை பூரிப்பாக நினைக்கிறேன் என்பதற்கு அடையாளமாய். 

என் தந்தை நம்பிக்கைகுறியவர்: அவர் என்ன என்ன செய்தாலும் அதில் நான் மகிழ்ச்சி அடைவேன். என்னுடைய வாழ்நாளில் பாதியை நான் அவருடன்தான் கழித்துள்ளேன்.என்னை மன்னித்துவிடுங்கள் எனது நண்பர்களிடம் நான் நீங்கள் நிஜமாக ஒரு பைலட் என்று சொல்லிக்கொள்ள நான் வெட்கப்படுகிறேன்.ஏனெனில் நீங்கள் ஒரு நல்ல பைலட்லுகைகளுக்கு நான் ஆசை பட்டதில்லை: என்னை மன்னித்துவிடுங்கள் என் புதிய நண்பர்களிடம் நான் உங்களை ஒரு ஓட்டுனர் என்று சொல்வதற்கு.ஏனென்றால் நான் ஒரு விமானியின் பெண்ணுக்கான எந்த சலுகையையும் பெற விரும்பவில்லை.

நடுத்தர வாழ்க்கைதான் வாழ்கிறோம்: நாம் ஒரு சாதாரண வாழ்க்கையைதான் வாழ்கிறோம்.பறந்து விரிந்த மலேசிய விமான சேவை குடும்பத்தில் நானும் ஒருத்தி.ஏனெனில் ஒரு சின்னசிசுவாக இருந்த பொழுது நானும் அதில் பயணித்துள்ளேன்.என் முதல் பயணம் என் தந்தையுடன்.என்னுடைய பிடித்தமான விமானி கோட்டா கின்னாபாலு.என் விமான காதல்: தெளிவாக கூறினால் நான் இதற்காக மிக சந்தோஷப்படவில்லை. ஆனால்,நான் ஒரு அபிமானிதான்.வளர வளர விமானங்கள் மற்றும் பறப்பதின் மேலான என் காதல் அதிகரித்தது.என் தந்தை, அந்த தொலைந்து போன விமானி,மலேசிய விமான நிறுவனத்திற்காக கிட்டதட்ட தன் பள்ளிபடிப்பு முடிவுற்றதில் இருந்து உழைத்துள்ளார்.வாழ்நாளை தியாகம் செய்தவர்: பல தடவை நாங்கள் அவரை வேறோரு விமான நிறுவனத்திற்கு மாற சொல்லி கேட்டும் அவர் மறுத்துவிட்டார்.ஏனெனில் அவர் தன் வாழ்நாள் முழுவதும் எங்களுடனேயே கழிக்க நினைத்தார்.எப்பொழுதெல்லாம் முடிகிறதோ அப்பொழுதெல்லாம் எங்களுடனேயே இருக்க நினைத்தார்.

விமானம் மட்டுமே என் தந்தையின் உயிர்: அவர் மட்டும் வேறு விமான நிறுவன அழைப்புகளை ஏற்றிருந்தால் தலைசிறந்த நிறுவனங்களில் இலவச கல்வி, எல்லா தேவைகளுக்கான பணம் என பல சலுகைகளை நாங்கள் அனுபவித்திருக்கலாம்.ஆனால்,என் தந்தை மலேசிய விமானியாக இருக்கதான் ஆசைபட்டார்.கொடுமையான சம்பவம்: அந்த கொடுமையான நிகழ்வு நடந்தபோதுதான் நம்முடைய வாழ்க்கையே திசை மாறியது.மூன்று முகமூடி அணிந்த திருடர்கள் நம் வீட்டை சூழ்ந்து கொண்டனர்.அப்போது என் அம்மா 7 மாத கர்ப்பம்.என் தந்தை எங்களுடன் அன்று இல்லாத காரணத்தா, என் தாய் எல்லாவற்றையும் அவர்களிடம் அளிக்க நேர்ந்தது.அன்று அவர் திரும்பி கோலாலம்பூர் திரும்ப வேண்டும் என்று என் அம்மா அவரிடம் எதையுமே சொல்லவில்லை.உயிர்களின் காவலர்: என் அம்மா, அப்பாவின் நிலையை புரிந்து கொண்டவர்.முழு விமான கட்டுப்பாட்டையும் என் தந்தை தனது தோளில் சுமக்கிறார்,அதனால் கவனம் மிக முக்கியம் என்பதை அறிந்து கொண்டவர் எனது தாய். பறக்கும் போது எனது தந்தை கிட்டத்தட்ட நூற்றுக்கணக்கானவர்களின் உயிருக்கு அவர்தான் பொறுப்பு என்பதை அறிந்து கொண்டவர்.

கண்ணீர் மழை: எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது.என்னுடைய ஆங்கில ஆசிரியை என்னை பார்த்து கேட்டார்,”உன் தந்தை பற்றி நீ எதை அதிகமாக ஞாபகம் வைத்துக் கொண்டிருக்கிறாய்?”அன்று நான் கண்ணீர் மழையில் நனைந்து கொண்டே சொன்னேன்,”என் தந்தை ஒரு நாளில் பாதி நேரம் கூட எங்களுடன் இருந்ததில்லை”.இதனால் என் தந்தை கண்டிப்பாக ஒரு தவறான தந்தை என்று அர்த்தம் அல்ல. 

கடின உழைப்பு: அவர் எங்கள் குடும்பத்திற்காக கடினமாக உழைக்கிறார்.நாங்கள் தாங்கிக் கொள்ளத்தான் வேண்டியுள்ளது மற்றவர்கள் “உன் தந்தை எங்கே?” என்று கேட்கும் போது.அவர்களிடம் நான் சொல்கிறேன்,”உலகத்தின் எந்த மூலையிலாவது அவர் தற்போது பறந்து கொண்டிருப்பார்.அவருடைய பட்டியலை பார்த்து சொல்கிறேன்” என்று.

வாழ்க்கையே சிறு காகிதம்: அவருடைய வாழ்க்கை முழுதும் ஒரு சிறு காகிதத்தில்தான் அடங்கி விடுகிறது ஒவ்வொரு மாதமும் அவர் எங்களுடன் பகிர்ந்துகொள்வதில்.

இரவில் காலை வணக்கம்: ஒவ்வொருமுறையும் அவருடைய பயணத்தை பற்றி கேட்டு நான் அவரை கஷ்டபடுத்த விரும்பியதே இல்லை.எப்பொழுதும் அவருடைய பட்டியலை நான் பார்த்துக் கொள்வேன்.அவர் பணிக்கு கிளம்பும்போது வீட்டில் அனைவரும் அவரை வழி அனுப்பி வைப்போம்.சில நேரங்களில் இரவிலும்,பகலிலும் செல்ல நேரிடும்.அதனால் நாங்கள் தூங்க போகும் போதே அவருக்கு “காலை வணக்கம்” சொல்லிவிட்டு சென்றுவிடுவோம்.சிறந்த விமானி என் தந்தை: அவர் வேலையில் இருந்து திரும்பி வரும்போது கதவின் அருகில் நின்று அனைவரும் அவரை வரவேற்போம்.ஆனால்,நான் நினைத்து கூட பார்க்கவில்லை அந்த மலேசிய விமானம் காணமல் போகும் வரை இவையெல்லாம் எங்களை விட்டு போய்விடும் என்று. 

பாதுகாப்பு அவர்தான்: ஒவ்வொரு நொடியும் அவர் வேலைக்கு செல்லும்போது பலநூறு உயிர்களுக்கு அவர்தான் பாதுகாப்பு.குடும்பங்களை இணைக்கும் பாலமாக,வர்த்தகம் செய்பவர்களுக்கு அதற்கான பங்களிப்பாக,சுற்றுலாபயணிகளின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்பவராக அவர் இருந்துள்ளார்.

 மனமுவந்த நன்றி: நான் நினைவு கூறுகின்றேன், ஒரு மாற்றுத்திறனாளி என் தந்தையை தனியாக சந்திப்பதற்காக லண்டன் விமானத்தில் இருந்து காத்திருந்தார்.அவர் என் தந்தையுடன் கைகுலுக்கி,”நீங்கள்தான் இந்த விமானத்தின் தலைமை விமானியா?மிக அருமையாக விமானத்தை தரை இறக்கினீர்கள்.மிக்க நன்றி” என்று கூறினார்.உள்ளுக்குள் அத்தருணத்தில் நான் ஒரு இளவரசியாக உணர்ந்தேன்.வீடு திரும்பாமலே போகலாம்: ஆனால்,எங்கள் உள்மனதில் ஒவ்வொரு முறை அவர் வேலைக்கு செல்லும் போதும் இது போன்ற தலைவிதியை நிர்ணயிக்கும் தொலைபேசி அழைப்புகள் வரலாம்.ஏன்,அவர் வீடு திரும்பாமலே கூட போய் விடலாம் என்பதை உணர்ந்திருந்தோம்.எங்கள் வாழ்க்கையில் அதனை ஒரு பகுதியாக ஏற்றுக்கொள்ள பழகி இருந்தோம்.

கடுமையான பயிற்சிகள்: இப்பணிக்காக அவர் பல பயிற்சிகளை கடக்க வேண்டி இருந்தது.வருடாவருடம் உடல்நிலை பரிசோதனை செய்துகொள்ள வேண்டி இருந்தது.மாணவர்கள் போல் அவருக்கும் தேர்வுகள் உண்டு.அவருடைய விமானம் பற்றிய குறிப்புகள் என் மருத்துவ படிப்பு புத்தகத்தை விட கனமானவை.பயணிகள் தாமதமானாலும் அவர் ஒருபோதும் தாமதமாக சென்றதில்லை.

சிறு துண்டு மகிழ்ச்சி: “நான் இன்னும் 7 நிமிடங்களில் தரை இறங்குவேன்” என்ற ஒரு சிறு துண்டு செய்திதான் ஆறுதல் எப்போதும் எங்களைப் போன்ற விமான பணிக்குழு குடும்பங்களுக்கு.விமான சேவையாளர்கள் உலகின் ஒரு மூலையை மற்றொரு மூலையுடன் சேர்ப்பதில் மகிழ்ச்சி அடைகின்றனர். 

பிரார்த்தனைதான் காப்பாற்றும்: தற்போது நம்முடைய முழு நம்பிக்கையையும், ஒத்துழைப்பையும் தர வேண்டிய நேரம்.மலேசிய விமானத்திற்கான நம்முடைய வேண்டுதல்களை அளிக்க வேண்டும்.ஒரு விசயத்தைப் பற்றிய உங்களுடைய முடிவை கூறும் முன்பு,ஒருவரை பற்றி தவறாக சுட்டிக் காட்டுவது,தவறான விசயங்களை பரப்புவது போன்ற நேரங்களில் நீங்கள் விமான நிறுவனங்களை மட்டும் சாடுவதில்லை,எங்களுடைய மனநிலையையும் புண்படுத்துகிறீர்கள் என்பதை மறந்து விடாதீர்கள்..!

No comments

Powered by Blogger.