Header Ads



சிங்கள இனத்தின் இனவிருத்திக்கு தடை ஏற்படுத்த முயற்சி - நாபானே தேரர்


சிங்கள இனத்தை அழிப்பதற்கு நூதன திட்டமொன்று வகுக்கப்படுவதாக ராமன்ய நிக்காயவின் பீடாதிபதி நாபானே தேரர் இந்தக் குற்றம் சுமத்தியுள்ளார்.

அமைச்சர் விமல் வீரவன்சவிற்கு பாராட்டு அளிக்கும் வகையில் பொல்கொல்ல பிரதேசத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்ற போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

வெளிநாடொன்றிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட சீரகத் தொகுதியில் சதகுப்த என்னும் பொருள் கலக்கப்பட்டிருந்தது. இந்தப் பொருளானது பெண்களின் கர்ப்பத்தை கலைப்பதுடன், பெண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

திட்டமிட்ட வகையில் சிங்கள இனத்தை அழிப்பதற்கு இவ்வாறான நூதன திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கடந்த காங்களிலும் சிங்கள இனத்தையும் பௌத்த மத்த்தையும் இல்லாதொழிக்க முயற்சிக்கப்பட்டது.

தற்போது நூதனமான முறையில் சிங்கள இனத்தின் விருத்திற்கு தடை ஏற்படுத்த முயற்சிக்கப்படுகின்றது. இது தொடர்பில் அனைவரும் கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகின்றது ஏன அவர் குறிப்பிட்டுள்ளார்.


2 comments:

  1. சீரகம் சிங்கல​ மக்கலுக்கு மட்டுமென்ரெ வருகிரதோ?

    ReplyDelete
  2. Sorry guys...

    எல்லாருமே தேரர் ஆகப்போறன் தேரர் ஆகப்போறன் எண்டு கெளம்பினா. பொம்பளங்களுக்கு புள்ள் வானத்தில இருந்தா உண்டாகும். அத உட்டுட்டு ஆகவேண்டியத சொந்தப்பொண்டாட்டிக்கு செய்ங்கப்பா இனம் பெருகும். அத உட்டுட்டு நச்சீரகத்தையும் பெருஞ்சீரகத்தையும் குறை சொல்லி வேலல்லப்பா.

    ReplyDelete

Powered by Blogger.