Header Ads



ரவூப் ஹக்கீம், ரணில், சந்திரிக்கா, பௌத்­த­ர்களை காட்டிக்கொடுத்து தேசத்துரோகக் குற்­ற­மி­ழைப்பு

(Vi) 
இலங்­கையில் பௌத்­தர்கள் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் மதச் சுதந்­தி­ரத்தை பறிக்­கின்­றனர். அங்கு மத நல்­லி­ணக்கம் இல்­லை­யென்ற இலங்­கைக்கு எதி­ரான இன்­னு­மொரு பிரே­ர­ணையை பிரான்ஸ் - ஜெனி­வாவில் முன்­வைக்­கப்­போ­கின்­றது. இதற்­கான முழுப் பொறுப்பையும் ஹக்கீம், ரணில், சந்­தி­ரிகா என்ற தேசத்­து­ரோக முக்­கூட்டு ஏற்­றுக்­கொள்ள வேண்­டு­மென குற்றம் சாட்டும் அரசின் பங்­காளிக் கட்­சி­யான ஜாதிக ஹெல உறு­மய, எமது தாய்­நாட்­டுக்கு எதி­ரான தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் சதித்­திட்­டத்­திற்கு இம்­மூ­வரும் துணை­போ­யுள்­ள­தா­கவும் தெரிவித்­துள்­ளது.

கொழும்பு மகா­வலி கேந்­திர நிலை­யத்தில் நேற்று திங்­கட்­கி­ழமை இடம்­பெற்ற ஜாதிக ஹெல உறு­ம­யவின் ஊட­க­வி­ய­லாளர் மாநாட்­டி­லேயே இவ்­வாறு தெரிவிக்­கப்­பட்­டுள்­ளது. இங்கு உரை­யாற்­றிய ஜாதிக ஹெல உறு­ம­யவின் தேசிய அமைப்­பா­ளரும் மத்­திய குழு உறுப்­பி­ன­ரு­மான நிஷாந்த ஸ்ரீவர்­ண­சிங்க, 

இலங்­கையின் மத நல்­லி­ணக்கம் இல்லை என்றும் பௌத்­தர்கள் சிறு­பான்மை இனத்­த­வர்­களின் (இந்து, முஸ்லிம், கிறிஸ்­தவம்) மதஸ்­த­லங்­களை இடிப்­ப­தா­கவும், அவர்­க­ளது மதச் சுதந்­திரம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் மதநல்­லி­ணக்கம் இலங்­கையில் கிடை­யாது என்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்தே ஜெனிவா மனித உரிமை ஆணைக்­குழு மாநாட்டில் பிரான்ஸ் மேலு­மொரு பிரே­ர­ணையை இலங்­கைக்கு எதி­ராக முன்­வைக்­கப்­போ­கின்­றது.

இதற்­கான அடித்­த­ளத்தை முன்னாள் ஜனா­தி­பதி சந்­தி­ரிக்­காவே ஏற்­ப­டுத்­தினார். தெற்­கா­சி­யாவின் கொள்கை விருப்பு நிலை­யத்தின் தலைவி என்ற போர்­வையில், இலங்­கையில் மத நல்­லி­ணக்கம் இல்­லை­யென்றும், சிறு­பான்மை இனத்­த­வர்­களின் மதச் சுதந்­திரம் பாதிக்­கப்­ப­டு­வ­தா­கவும் குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து அறிக்­கையை ெவளியிட்டு, அந்த அறிக்­கையை எதிர்க் கட்சித் தலைவர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­க­வி­டமும் கைய­ளித்தார். ஆனால் இந்த அறிக்கை தொடர்­பாக எதிர்க்­கட்சித் தலைவர் இதுவரையில் எது­வி­த­மான கருத்தும் ெதரிவிக்­க­வில்லை.

அதே­போன்று அமைச்­ச­ரவை அந்­தஸ்­துள்ள நீதி அமைச்சர் ரவூப் ஹக்­கீமும் நவிப்­பிள்ளை இலங்கை வந்த நேரம் தனது அமைச்சில் வைத்து இர­க­சிய அறிக்­கையை கைய­ளித்­துள்ளார்.

அதில் முஸ்­லிம்­களின் பள்­ளி­வா­சல்களை உடைப்­ப­தா­கவும், மத கலா­சார ரீதி­யான உடைகள் அணி­வ­தற்கு தடைவிதிப்­ப­தா­கவும், தமது கலா­சார மத­ரீ­தி­யான உணவு வகை­க­ளுக்கு தடைவிதிப்­ப­தா­கவும் ெதரிவித்து, இதன் பின்­ன­ணியில் பௌத்­தர்­களும், ஜாதிக ஹெல உறு­மய, பொது­ப­ல­சேனா, சிங்கள ராவய ஆகி­யன இருப்­ப­தா­கவும் மொத்தம் 241 குற்­றச்­சாட்­டுக்கள் அடங்­கிய அறிக்­கை­யொன்றை ஹக்கீம் வழங்­கினார்.

இன்று ஹக்கீம், சந்­தி­ரிகா மற்றும் எதிர்க்­கட்­சித தலைவர் ரணில் என்ற முக்­கூட்டின் ஆத­ர­வுடன் பிரான்ஸ் ஜெனி­வாவில் எமக்­கெ­தி­ராக மத நல்­லி­ணக்கம் இல்­லை­யென்ற குற்­றச்­சாட்­டுக்­களை முன்­வைத்து பிரே­ர­ணையை முன்வைக்­கப்­போ­கின்­றது.

எனவே இவர்கள் மூவரும் பௌத்­த­ர்களை காட்டிக்கொடுத்து தேசத்துரோகக் குற்­ற­மி­ழைத்­துள்­ளனர். தமிழ் தேசியக் கூட்­ட­மைப்­பினர் இலங்­கைக்கு எதி­ராக சதித்­திட்­டத்தை அமெரிக்கா ஊடாக மேற்­கொண்டு வரு­கின்­ற­னர்.

இறுதிக்கட்ட யுத்­தத்தில் ஆயி­ரக்­க­ணக்­கான தமி­ழர்கள் கொல்­லப்­பட்­ட­தா­கவும் ஊடகச்சுதந்­திரம் ஜன­நா­யக உரி­மைகள் இலங்கை அர­சாங்­கத்தால் பறிக்­கப்­ப­டு­வ­தா­கவும், மனித உரிமை மீறப்­ப­டு­வ­தா­கவும் ெதரிவித்து அெமரிக்­காவின் உத­வி­யுடன் இலங்­கைக்கு எதி­ரான பிரே­ர­ணையை ஜெனி­வாவில் கூட்­ட­மைப்­பினர் முன்­வைத்­தனர்.

இதற்கு அடுத்­த­ப­டி­யாக முக்­கூட்டு", இலங்­கையில் சிறு­பான்மை இன மக்­க­ளுக்கு மதச் சுதந்­திரம் இல்­லை­யென்ற குற்­றச்­சாட்டை அடிப்­ப­டை­யாக பிரான்ஸ் எமக்­கெ­தி­ராக பிரே­ர­ணையை முன்­வைக்­கப்­போ­கி­றது.

இதுவும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் இலங்கைக்கு எதிராக சதித்திட்டத்திற்கு மேலும் வலுச்சேர்க்கப்போகின்றது. இன்னும் இரண்டொரு தினங்களில் இலங்கையின் விதி ஜெனிவாவில் நிர்ணயிக்கப்பட உள்ள நிலையில் சந்தி ரிகா, ஹக்கீம், ரணில் கூட்டணி தேசத்துரோ கத்தை செய்துள்ளனர் என்றும் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க ெதரிவித் தார்.
இந்த ஊடகவியலாளர் மநாநாட்டில் உதய கம்மன்பிலவும் கலந்துகொண்டார்.

No comments

Powered by Blogger.