ஆசனத்திலிருந்து அகற்றப்பட்ட அஸ்வர்
(ஒற்றன்)
பாராளுமன்றம் 20-03-2014 சபாநாயகர் சமல் ராஜபக்ச தலைமையில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஒருகட்டதில் தலைமைப் பொறுப்பை அஸ்வரிடம் ஒப்படைத்து விட்டு சபாநாயகர் அங்கிருந்து வெளியேற அஸ்வர் சபாநாயகர் ஆசனத்தில் அமர்ந்து கூட்டத்தை முன் னெடுக்க முயன்றார்.
ஐக்கிய தேசியக் கட்சிப் பாரளுமன்ற உறுப்பினர் எரென் விக்கிரமரத்ன தலைமை தாங்குவதற்கு பொருத்த மற்றவர் என்று குறிப்பிடப்பட்ட ஒருவர் எப்படி இந்த சபையை வழி நடாத்த முடியும் என்று கேள்வி எழுப்ப எதிர் தரப்பினர் அனைவரும் தமது எதிர்ப்பை அங்கு வெளிப்படுத்தினார்கள்.
என்னை சபாநாயகர்தான் தலைமப் பதவியில் அமர்த்தினார் நீங்கள் அமைதியாக இருங்கள் என்று அஸ்வர் தர்க்கம் புரிந்தார். அவருக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கா பேச முற்பட்டார். என்றாலும் அவற்றை எதிரணி உறுப்பினர்கள் பொருட்படுத்தவில்லை. அவர்கள் எல்லோரும் எழுந்து நின்று அஸ்வர் தலைம தாங்க முடியாது என்று கூச்சல் போட்டார்கள்.
அஸ்வர் அவர்களைப் பொருட்படுத்தாமல் ஜே.வி.பி.பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத்தை பேசுமாறு அழைக்க இந்த சபையில் அமைதியை ஏற்படுத்த முடியாத உங்கள் முன்னால் என்னால் எப்படிப்பேச முடியும் என்று விஜித ஹேரத்தும் தர்க்கம் புரிய சபையில் அமைதியின்மை மேலும் அதிகரித்தது.
அஸ்வரால் எப்படியும் அங்கு கூட்டத்தை முன்னெடுக்க முடியத சூழ்நிலை. கூச்சலுக்கும் குழப்பத்திற்கும்; மத்தியில் தலைமை ஆசனத்தில் இருந்த அஸ்வருக்கு வந்த தொலைபேசி அழைப்பைத் தொடர்ந்து அவர் ஆசனத்திலிருந்து எதிரணியினரின் கூச்சலுக்கு மத்தியின் எழுந்து செல்ல வேண்டி ஏற்பட்டது. தொலைபேசியில் அஸ்வருர்க்கு சபாநாயகர் கொடுத்த கட்டளைப்படி அவர் ஆசனத்திலிருந்து வெளியேற வேண்டி ஏற்பட்டது. ஏற்கெனவே நடந்த சம்பவம் ஒன்றினால் அஸ்வரை தலைம ஆசனத்தில் அமர்த்தக்கூடாது என்று எதிரணியினர் சபாநாயகரை வேண்டி அதற்கு சபாநாயகரும் இணங்கி இருந்தமையும் இந்தக் குழப்பத்திற்குக் காரணம்.
Masha allah ithu awarudaya muthal ilivu insha allah awarukana allahvin thiruvilayadal arampam
ReplyDeleteநூறுல்!அல்லஹ்வுடன், திருவிளையாடல் என்ற வார்த்தையை தவிர்ப்பது நல்ல்து
ReplyDelete