கல்குடா தௌஹீத் ஜமாத் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் ஆலிமாக்களுக்கான செயலமர்வு
(அனா)
ஆலிமாக்களுக்கான ஒரு நாள் செயலமர்வு நேற்று (01.03.2014) கல்குடா தௌஹீத் ஜமாதின் மகளிர் பிரிவின் ஏற்பாட்டில் மீராவோடை ஜூம்ஆ பள்ளிவாயலில் இடம் பெற்றது.
ஆலிமாக்கள் தஃவாப் பணியில் ஈடுபட வேண்டியதன் அவசியத்தை வலியுருத்தும் நோக்கில் நடைபெற்ற செயலமர்வில் ஐம்பது (50) ஆலிமாக்கள் கலந்து கொண்டனர்.
வளவாளர்களாக மௌலவி எ.எல்.பீர்முஹம்மது தஃவாப் பணியில் பெண்களின் பங்கும் தடைகளும் தீர்வுகளும் எனும் தலைப்பிலும், மருதமுனை தாருல் ஹூதா மகளிர் கல்லூரி அதிபர் மௌலவி எம்.எல்.முபாறக் மதனி ஆலிமாக்களின் ஆளுமை விருத்தி தொடர்பாகவும், தையிபா சமுக சேவைகள் நிறுவனத்தின் பணிப்பாளர் மௌலவி எம்.ஜே.எம்.ரிழ்வான் மதனி இஸ்லாமியப் பணியில் ஸஹாபிப் பெண்களின் தியாகம் எனும் தலைப்பிலும், கிழக்குப் பல்கலைக் கழக விரிவரையாளர் மௌலவி நஸ்மல் பலாஹி அழைப்புப் பணியில் இன்றைய தேவையும் ஆலிமாக்களின் பொருப்புக்களும் என்ற தலைப்பிலும், மௌலவி அப்துல் ஹமீது ஷரபி அழைப்புப் பணியில் உள வளப் பங்க எனும் தலைப்பிலும் கருத்துக்களை வழங்கினர்.
இந் நிகழ்வில் கல்குடா தௌஹீத் ஜமாதின் பொதுச் செயலாளர் மௌலவி எஸ்.எச்.அறபாத் பொருளாளர் ஈ.எல்.சுபைர் மற்றும் உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment