இலங்கை முஸ்லிம்களின் பிரச்சினைகளை ஜெனீவாக்கு கொண்டுசென்ற முஸ்லிம் காங்கிரஸினை மெச்சுகிறோம்'
(அஸ்ரப் ஏ. சமத்)
அண்மைக் காலமாக முஸ்லீம் சமுகத்திற்காக இலங்கையில் இழைக்கப்பட்டு வரும் பிரச்சினைகளை இந்த உலகின் பிரச்சினைகளைக் கொண்டு செல்லக்கூடிய அதி உயர் நிறுவனமான ஜெனிவா ஜ.நா.வின் மனித உரிமைக்கே கொண்டு சென்றுள்ள ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரசை நாம் மெச்சுகின்றோம் அத்துடன் அக் கட்சியின் தலைமைத்துவத்தையும் செயலாளர் நாயகத்தையும் நாம் பாராட்டுகின்றோம்.
அக் கட்சி முஸ்லீம் சமுகத்தின் பிரச்சினைகளை எவ்வாறு கையாளவேண்டுமோ அந்தளவுக்கு அது கையாண்டுள்ளது. என சர்வதேச முஸ்லீம் வை.எம்.எம்.ஏ தலைவர் அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளார்.
அண்மைக் காலமாக முஸ்லிகளது 18 பள்ளிவசால்கள் தாக்கியமை, வியாபார தளங்கள், கொழும்பில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லீம்களது குடியிருப்புக்கள் அகற்றியமை. முஸ்லீம்களது உணவு (ஹலால்) உடை பர்தா மற்றும் கலை கலாச்சார விடயங்களில் பெரும்பாண்மையினரது ஆதிகக்கம் விசமப் பிரச்சாரம் மற்றும் ;இனங்களுக்கிடையே பகைமைகளை உண்டுபண்னியமை.
அத்துடன் வடக்கில் இருந்து வெளியேறிய முஸ்லீம்களது மீள்குடியேற்றம் இதுவரை நடைபெறவில்லை, வடக்கில் இருந்த 20 ஆயிரத்திற்கும் மேற்பபட் முஸ்லீம்களது குடியிருப்புக்கள், சொத்துக்கள், 75க்கும் மேற்பட்ட பள்ளிவாசல்கள் போன்ற விடயங்கள். வட கிழக்கு மாகாணங்களில் யுத்த காலத்தில் 7000க்கும் மேற்பட்ட முஸ்லீம்கள் காணமல்போணமை. போன்ற சம்பவங்களுக்கு இதுவரை அரசோ அல்லது சர்வதேச சமுகம் உதவவில்லை. இச் சம்பவங்கள் சர்வதேசத்துக்கு கொண்டு செல்லப்படவில்லை.
கொழும்பில் உள்ள பாடசாலைகளில் முஸ்லீம் மாணவிகளது மற்றும் ஆசிரியைகளது இஸ்லாமிய உடைகளை அணியும் பிரச்சினைகள், தெஹிவளை, தம்புல்லை, கிராண்பாஸ் பள்ளிவாசலகள் பிரச்சினைகளுக்கு இதுவரை தீர்க்கமானதொரு நடவடிக்கை எடுக்காமை, கிழக்கில் முஸ்லீம்களது காணி நிலங்கள் அபகரித்துள்ளமை, பெரும்பாண்மையினர் வணக்கஸ்தலங்கள், குடியேற்றம் நடைபெறுகின்றமை, இந்த நாட்டில் முஸ்லீம்கள் இறைச்சி விற்பணைத் தொழிழை தடை விதித்தமை, ஜீலானி பள்ளிவாசலில் அண்டியுள்ள இடங்களை அபகரித்தமை பிரபல பாடசாலைகள், சட்டக்கல்லூரி பல்கலைக்கழகம் போன்ற பல்வேறு கல்வி நிறுவனங்களில் முஸ்லீம் மாணவர்களுக்கு அனுமதி மறுப்பு போன்ற விடயங்களை முஸ்லீம் பழிவாங்கப்படுகின்றனர். முஸ்லீம்களுக்கு எதிராக செயல்படும் அதிதீவிர பௌத்த அமைப்புக்களை அரசு கட்டுப்படுத்த தவறிவிட்டுள்ளன.
இவ் விடயங்கள் பாராளுமன்றத்தில் அமைச்சரவையில் ஜனாதிபதி மட்டத்தில் கவணத்திற்கெடுக்கப்படவில்லை. இவ் விடயத்தை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் அரசில் இருந்து கொண்டு இதனை ஜெனிவா மனித உரிமைக்கும் அரபு நாடுகளுக்கும் தெரிவித்தமைக்காக எனது அமைப்பு சார்பாக நன்றி தெரிவிக்கின்றோம். என அஸ்ரப் ஹூசைன் தெரிவித்துள்ளர்ர்.
நல்ல தொகுப்பு.யாராவது (இந்த அரசு ஆட்சிக்கு வந்த பின்னராவது) முஸ்லிம்களுக்கு எதிராக நடந்த சம்பவங்கள் அனைத்தையும் ஒன்றன் பின் ஒன்றாக இங்கு அல்லது பிரத்தியேகமாக குறிப்பிட முடியுமா?SLMC ஆல் முடியுமென்று நினைக்கிறோம்.
ReplyDeleteமனிதர்கள் என்ற வகையில் ,வெளிப்படையை வைத்துத்தான் எம்மால் தீர்மானஙளை ,அல்லது அனுமானங்களை எடுக்க முடியும் .மறைவான விடையங்களை அறிந்தவனும் அறிவதற்குத்தகுதியுடையவனும் சக்தியுடையவனும் அல்லாஹ் மாத்திரமே.இந்த வகையில் முஸ்லிம் காங்கிரசின் ,இந்த நடவடிக்கை மதிக்கத்தக்க்தும் மெச்சத்தக்கதுமாகும்.ஆனால் இதிலுள்ள மறைமுக சூத்திரத்தை யாமறியோம்.ஆனால் இதி ல் சுயநலங்கள் இல்லை என்பது இல்லை ,என்பது மாத்திரம் உண்மை.அல்லாஹ்வே யாவுமறிந்தவன்,
ReplyDelete