Header Ads



கிழக்கு மாகாண சபையில் விஷேட அறிவிப்பு

(ஏ.எல்.ஜனூவர்)

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான தயாகமகே, ஜெமில், பிரியந்த பத்திரன 90 நாட்கள் மாகாண சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாததால் மாகாண சபை உறுப்பினர்களின் பதவி வறிதாக்கப்பட்டமை குறித்து கிழக்கு மாகாண சபையில் விஷேட அறிவிப்பு தொடர்ந்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களாக செயல்பட மூன்று உறுப்பினர்களுக்கும் கிழக்கு மாகாண சபை ஏகமனதாக முடிவு...!

கிழக்கு மாகாணசபை உறுப்பினர் திரு.தயாகமகே (ஐ.தே.கட்சி), ஜெமில் (முஸ்லிம் காங்கிரஸ்), பிரியந்த பத்திரன (சி.சு.கட்சி) ஆகிய மூன்று உறுப்பினர்கள் 90 நாட்கள் தொடர்ச்சியாக கிழக்கு மாகாண சபைக் கூட்டங்களில் கலந்து கொள்ளாமையினால் இம் மூன்று உறுப்பினர்களின் மாகாண சபை உறுப்பினர்கள் பதவிகள் வறிதாக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண சபையின் தலைவி திருமதி ஆரியவதி கலப்பதி தலைமையில் கிழக்கு மாகாண சபையின் கூட்டம் சென்ற 18 ம் திகதி நடைபெற்ற போது கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் திருமதி ஆரியவதி கலப்பதி சார்பில் வீதி அபிவிருத்தி அமைச்சரும், அமைச்சரவைப் பேச்சாளருமான எம்.எஸ்.உதுமாலெப்பை சபையில் விஷேட அறிக்கை ஒன்றை சமர்ப்பித்தார்.

கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களான திரு.தயாகமகே, ஏ.எம்.ஜெமில், மு.P.பிரியந்த பிரேமகுமார ஆகியோர் கடைசியாக சபைக் கூட்டத்திற்கு வருகை தந்து தங்களின் வரவைப் பதிவு செய்த தினங்களில் இருந்து 90 நாட்கள் கடந்த நிலையில் அதற்கு இடைப்பட்ட காலத்தில் நடைபெற்ற சபையின் எந்தவொரு கூட்டத்திற்கும் சமூகம் அழிக்காமல்;.  இருப்பதாகவும் அத்துடன் அவர்கள் மூவரும் தங்களது வராமைக்காக சபையின் முன் அனுமதி எதனையும் பெற்றிருக்கவில்லை என கிழக்கு மாகாண சபை தவிசாளர் அறிவித்துள்ளார். 1987ம் ஆண்டு 42ம் இலக்க மாகாண சபை சட்டத்தின் பிரிவு (2) உடன் கிழக்கு மாகாண சபையின் செயன்முறை விதிக்கோவை பந்தி (65) இனை சேர்த்து வாசிக்கப்படுவதன் பிரகாரம் இம் மூன்று கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களுக்கான ஆசனங்கள் வறிதாக்கப்படுவதான ஒரு பிரகடனத்தை கிழக்கு மாகாண சபையின் தவிசாளரின் பிரதிநிதியாக இச்சபைக்கு சமர்பிக்கின்றேன்.

இருப்பினும் நிதிக் கோட்பாட்டின் அடிப்படையில் இவ்வாறான பிரகடனம் ஒன்றை ஏன் நிறைவேற்றக்க கூடாது என்ற நிலமை உருவாகி உள்ளதாலும், இம் மூன்று உறுப்பினர்கள் கிழக்கு மாகாண சபையின் தவிசாளருக்கு 2014.03.08 ம் திகதிய கடிதத்தில் வழங்கப்பட்டுள்ள விளக்கங்களில் வலிதான காரணங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. எனவே கிழக்கு மாகாண சபை இது தொடர்பான ஒரு பிரகடனத்தை குறித்த சட்ட ஏற்பாடுகளின் (29) பிரிவின் பிரகாரம் நிறைவேற்ற இச்சபைக்கு முன் மொழிகின்றேன். இம் மூன்று உறுப்பினர்களின் வறிதாக்கப்பட்ட உறுப்புரிமை தொடர்பாக வாக்கெடுப்பு நடாத்தப்பட்டு இம் மூன்று உறுப்பினர்களும் தொடர்ந்து கிழக்கு மாகாண சபையின் உறுப்பினர்களாக செயல்படுவதற்கு ஏகமனதாக முடிவு செய்யப்பட்டுள்ளது.  

இம் மூன்று மாகாண சபை உறுப்பினரகள் தொடர்ச்சியாக 90 நாட்கள் கிழக்கு மாகாணசபை கூடடங்களில் சமுககமளிக்காது  தொடர்பான விளக்;கம் கேட்டு கிழக்கு மாகாணசபையினால் அனுப்பபட்ட கடிதங்களுக்கு நியாமான காரனங்கள் தெரிவித்து விளக்க கடிதங்கள் அனுப்பியுள்ளனர்.

No comments

Powered by Blogger.