மடவளை மதீனா மத்திய கல்லூரி மைதானத்திற்கு உதவிய நலன் விரும்பி
(JM.Hafeez)
மடவளை மதீனா மத்திய கல்லூரி மைதானத்திற்கு பாதுகாப்பற்ற பிரதான நுழை வாயில் காணப் படுவதன் காரணமாக இரவு வேளைகளில் சமூக விரோத செயல்கள் இடம் பெறுவதாகவும் அதனை உடன் நிறுத்த வேண்டும் எனக்கோரி சாதாரண நலன் விரும்பி ஒருவர் ஐம்பதாயிரம் ரூபாவிற்கும் மேற்பட்ட தொகையை தனது சொந்தப் பணத்திலிருந்து பெற்று ஒரு பாதுகாப்பு கேட் அமைத்துக் கொடுத்துள்ளார்.
மடவளையைச் சேர்ந்த அஸ்ரப் மொகமட் அபூபக்கர் என்பவரே இதனைத் மேற்கொண்டுள்ளார். அவ்hறு வாயிற் கதவு பொருத்தும் எளிய வைபவததிற்கு அவரை ஊக்கு விக்ககும் வகையில் மடவளை ஜாமியுல் கைராத் பள்ளி பரிபாலன சபைத் தலைவர் ஏ.டப்ளியு.எம். நாஜிம் உற்பட பலர் கலந்து கொண்டனர்.
Post a Comment