மழை பெய்ய வேண்டி, கழுதைகளுக்கு திருமணம்
இந்தியா - வேலூர் அடுத்த அம்மணாங்குட்டையில் சாமியார் மடம் விசாலாட்சி உடனுறை காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. இங்கு மழை வேண்டியும், உலகம் சுபிட்சமாக இருப்பதற்காகவும் 3 நாள் சிறப்பு பூஜைகள் கடந்த 18ம் தேதி தொடங்கியது.
அன்று காலை விக்னேஷ்வர பூஜை, கோபூஜை, மகா சங்கல்பம், விநாயகர் பூஜையும், மாலையில் ஜெபம் பாராயணமும், 2வது நாளான நேற்று காலை கலச பூஜை, சுமங்கலி பூஜை, கன்னியா பூஜை, குருபூஜையும், மாலையில் ஆனை குளத்தம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், ஜெபம் பாராயணமும் நடைபெற்றது.
மூன்றாவது நாளான இன்று மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைக்கும் பஞ்சகல்யாணி திருமண வைபவம் நடைபெற்றது. பின்னர் இந்திரன் மற்றும் வருண பகவானுக்கு சிறப்பு ஹோமம் செய்தனர். தொடர்ந்து இன்று மாலை விஷேச ஆரத்தியும், ஜெபம் பாராயணமும் நடைபெறுகிறது. இந்த சிறப்பு பூஜையில் 150க்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Post a Comment