இலங்கையின் கடற்கரை பிரதேசங்களை கைப்பற்ற முஸ்லிம் தீவிரவாதிகள் சதி - பொது பலசேனா
இலங்கையின் கடற்கரையோரப் பிரதேசத்தை முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றுவதற்கான சர்வதேச சதி ஒன்றுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு கூறுகின்றது.
முஸ்லிம் தலைவர்களை இலக்கு வைத்து கடந்த ஒரு வார காலமாக மிக மோசமான முறையில் தாக்கி வரும் பொதுபலசேனா அமைப்பு புத்தளம் மன்னார் கடற்கரையோரப் பிரதேசத்தின் ஆக்கிரமிப்பு இந்தடிப்படையில் இடம்பெற்று வரும் ஒன்று என்றும் அதனைத் தேடிப்பார்க்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் கைத்தொழில் வணிக அமைச்சருமான ரிஷாத் பதியுதீனை இலக்காக வைத்து அறிக்கைகளை விடுத்து வரும் பொதுபலசேனா அமைச்சர் ரிசாத் பதியுதீன் விடுதலைப் புலிகளால் விரட்டப்பட்ட முஸ்லிம்களுக்கு அவர்கள் முன்பு வாழ்ந்த பிரதேசங்களில் வீடுகளை நிர்மாணித்துக் கொடுப்பதற்கு மேற்கொண்டு வரும் செயற்பாட்டை விமர்சித்துள்ளது.
இதுகுறித்து, பொதுபலசேனா விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது,
இடம்பெயர்ந்திருப்போருக்கு வீடுகள் வழங்கப்பட வேண்டும். அவர்களுடைய இன மத அடிப்படையை கவனத்தில் கொள்ளாது அவர்களுக்கு உடன் வசதிகளை வழங்க வேண்டும். அதில் முதலில் அவர்கள் யுத்தத்துக்கு முன் வசித்த பகுதிகளில் வீடுகளை நிர்மாணித்து குடியேற்ற வேண்டும்.
இலங்கையின் பசுமை காடுகள் அழிந்து செல்லும் யுகத்தில், வில்பத்து காட்டுக்கருகில் சுத்தப்படுத்தி வீடுகளை நிர்மாணிக்க நடவடிக்கை எடுப்பது மிகப் பயங்கரமான சுற்றாடல் அழிவாகும். இந்த நாட்டில் வாழ்வதற்கு எவ்வளவோ இடமிருக்க தமது அரசியல் நோக்கத்துக்காக இவ்வாறு வில்பத்து சரணாலயத்தை சுத்தப்படுத்தி அழிப்பதற்கு இடமளிப்பது குற்றச் செயலாகும்.
அமைச்சர் ரிஷாத் பதியுதீன் இந்த நாட்டின் கைத்தொழில் அமைச்சர். அவர் மத்திய கிழக்கு நாடுகளுக்கு சென்று முஸ்லிம்களுக்கு வீடுகளை நிர்மாணிப்பதற்கு அரச சார்பற்ற அமைப்புக்களோடு ஒப்பந்தம் செய்வது பொதுவாக அரச நிர்வாகம் தொடர்பான பிரச்சினையாக நாம் காண்கின்றோம்.
யுத்ததின் பின்னர் சகல தரப்பினருடனும் பேசி நம்பிக்கை ஏற்படும் வகையில் ஒருமைப்பாடு ஏற்படும் வகையில் சமூக ஒருமைப்பாட்டை மேம்படுத்தும் வகையில் மீள் குடியேற்றம் இடம்பெற வேண்டும். எனினும் இவ்வாறு புதிய முஸ்லிம் கிராமங்களை ஏற்படுத்துவது எதிர்கால நெருக்கடியின் ஆரம்பமா? அவர்கள் அகதிகளானால் அவர்கள் ஆரம்ப ஊர்கள் எவை? அவர்களுக்கு வழங்குவதற்காக வில்பத்து காட்டை அழிக்கலாமா? பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சுற்றாடல் அமைச்சர் இது தொடர்பாக ஏன் மௌனம் காக்கிறார்கள்.
அமைச்சர் இதுபற்றி என்ன கூறுகிறார். அரசுக்கு இதற்கு நிதி கிடைத்ததா? இலங்கையின் கடற்கரைப் பகுதிகளை முஸ்லிம் தீவிரவாதிகள் கைப்பற்றுவது தொடர்பாக பல கலந்துரையாடல்கள் நாட்டுக்குள்ளும் சர்வதேச மட்டத்திலும் இடம்பெற்றுள்ளதாக எமக்கு கிடைத்துள்ள அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பான விபரங்களை இலங்கை அரச வெப்தளங்களில் காண முடியாத போதும் மத்திய கிழக்கு அரச சார்பற்ற வெப்தளங்களில் காணலாம்.
What a stupid gnana sara.
ReplyDeletedear muslims ministers and mp's this is the our time bodhubala sena going to destroy Allahu our muslims Nd culture so plesae we have to be workup
U always coming thru wrong way, what u thing to do can do in Burma Jungle not in Sri Lanka Cities, u want to make a negative history but with all the God's support we will live together and u will dream only about your negative motive,, If you want to proof your patriotism take a 90'' turn and do something good for all in sri lanka, we will tell sri lanka matha not your mantra,,,,,,
ReplyDeleteவேதாளம் மீண்டும் முருங்கை மரம் ஏறுகிறது!
ReplyDeleteMental getting worse
ReplyDelete