Header Ads



ஒரு வரம் தாருங்கள் என மன்றாடிக் கேட்கின்றேன் - றிசாத் பதியுத்தீன்


(அஷ்ரப் ஏ சமத்)

முஸ்லீம் காங்கிரசின் தலைமைத்துவத்தைப் பார்த்து ஜனாதிபதி கெட் அவுட் 'வெளியே போ' என்று சொல்லியும் வெட்கமில்லாமல் கூனிகுருகி அந்தக் கதிரையிலேயே இருக்கின்றதொரு தலைமைத்துவத்தையே நாம் காண்கின்றோம். மறைந்த தலைவர் அஸ்ரப் அவர்களின் தலைமைத்துவத்துவம் ஒரு தன்மாணம் உள்ளதொரு தலைதைதுவமாக இருந்தது. அந்த தலைமைத்துவத்தை கண்டால் அன்று இருந்த ஜனாதிபதியோ, பிரதமர் மிகவும் கண்னியமாகவும் மரியாதையாகவும் கொடுத்து வந்தார்கள். அவரைக் கண்டால் எழும்பி மரியாதை கொடுப்பார்கள்.  ஆனால் தற்போதைய முஸ்லீம் காங்கிரஸ் சொல்லாக் காசியாக மாறிவிட்டது.  மேற்கண்டவாறு அகில இலங்கை மக்கள் காங்கிரசின் கொழும்பு மீராணியா வீதியில்   நடைபெற்ற கூட்டத்தில் உரையாற்றும்போதே அமைச்சர் றிசாத் பதியுத்தீன் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் கொழும்பு வாழ் மக்கள் முஸ்லீம் காங்கிரசிற்கு வாக்களித்து மாரநகரசபைக்கும், மாகாணசபைக்கும் பிரதிநிதிகளை அனுப்பிணீர்கள். ஆனால் என்ன நடந்தது. அவர்கள் இந்த மக்களது பிரச்சினைகளை எங்கயாவது பேசீனார்களா? ஆனால் நாங்கள் உங்களது பிரச்சினைகளுக்கு முகம் கொடுப்போம். புதுக்கடையில் எத்தனை ஆசிரியர்கள் சட்டத்தரிணிகள், வைத்தியர்கள் உள்ளனர், ஆனால் மன்னாரில் கல்முனை  போன்ற பிரதேசங்களில் 100க்கும் மேற்பட்ட வைத்தியர்கள் பொறியியலாளர்கள் உள்ளனர். ஆகவே தான் உங்களது வாக்குகளை எங்களது கட்சிக்கு போட்டு உங்கள் பகுதிகளைச் சேர்ந்த பிரதிநிதிகளை தெரிபுசெய்து இந்தப் பகுதிகளது பிரச்சினைகளை பேசுவதற்கு ஒரு வரம் தாருங்கள் என மன்றாடிக் கேட்கின்றேன் எனக் கூறினார் அமைச்சர் றிசாத் பதியுத்தீன்.

No comments

Powered by Blogger.